Home /News /national /

பக்தர்களோடு பக்தராக திருப்பதி ஏழுமலையானை தரிசித்த துணை முதல்வர்

பக்தர்களோடு பக்தராக திருப்பதி ஏழுமலையானை தரிசித்த துணை முதல்வர்

திருப்பதியில் மக்கள் கூட்டம்

திருப்பதியில் மக்கள் கூட்டம்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருப்பதி மலைக்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசித்தார்.

புரட்டாசி சனிக்கிழமை என்பதால், நேற்று மாலை 300 ரூபாய் டிக்கெட் வாங்கி பக்தர்களோடு பக்தராக வரிசையில் சென்று ஓ.பன்னீர்செல்வம் ஏழுமலையானை தரிசித்தார்.

இந்நிலையில், அவர் இன்று அதிகாலை மீண்டும் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து, ரங்கநாயகர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் துணை முதல்வருக்கு ஆசி வழங்கினர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரிஷிகேஸ் ராய், ஆந்திர காவல்துறை தலைவர் தாகூர், மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் ஆகியோரும் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தனர்.

இதனிடையே, ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் கோவில் மாடவீதிகளில் வலம்வந்தார்.
Published by:DS Gopinath
First published:

Tags: Tirupathi

அடுத்த செய்தி