போலிச் செய்திகள் பரப்பியதாக பேஸ்புக் குற்றச்சாட்டு! விளக்கம் அளித்த காங்கிரஸ்

எங்களுடைய ஆய்வில் அவர்கள் அனைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் ஐ.டி. பிரிவுடன் தொடர்பில் இருந்தனர். அதன்படி, 687 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது.

news18
Updated: April 1, 2019, 8:26 PM IST
போலிச் செய்திகள் பரப்பியதாக பேஸ்புக் குற்றச்சாட்டு! விளக்கம் அளித்த காங்கிரஸ்
காங்கிரஸ்
news18
Updated: April 1, 2019, 8:26 PM IST
பிரதமர் மோடிக்கு எதிராகப் போலியான செய்திகளைப் பரப்பிய காங்கிரஸ் ஐ.டி விங்குடன் தொடர்புடைய 687 பேஸ்புக் பக்கங்களை முடக்கியுள்ளோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தேர்தல் கட்சிகளின் பிரச்சாரம் களத்தில் மட்டுமில்லாமல் இணையதளத்திலும் முக்கியத்துவம் மிகுந்தததாக உள்ளது. ஆனால், இணையத்தில் அதிகளவில் போலிச் செய்திகளே பரவிவருகின்றன.

தேர்தல் நெருங்கிவரும் இந்தநிலையில், காங்கிரஸ் ஐ.டி விங்குடன் தொடர்புடைய 687 போலிச் செய்திகளைப் பரப்பிய பேஸ்புக் பக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு ஆதவாக இயங்கிய பல பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் தலைவர்கள் ஏன் பாதுகாப்பான தொகுதியைத் தேர்வு செய்கிறார்கள்?

இதுதொடர்பாக பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் இணையபாதுகாப்பு கொள்கை பிரிவின் தலைவர் நாதானியல் கிளிசெர் வெளியிட்ட அறிக்கையில், ‘தனிப்பட்ட நபர்கள் போலியான பேஸ்புக் கணக்கைத் தொடங்கி அவர்களுடைய பதிவுகள் அதிக நபர்களைச் சென்றடைய சில அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

அவர்களுடைய பதிவுகள், உள்ளூர் செய்திகளை உள்ளடக்கியதாகவும், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.கவை விமர்சனம் செய்யும் வகையிலும் இருந்தது.
Loading...
வயநாடு தொகுதியில் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை நிறுத்திய பாஜக!

இந்தச் செயலில் ஈடுபடும் நபர்கள் அவர்களுடைய அடையாளங்களை மறைத்துள்ளனர். எங்களுடைய ஆய்வில் அவர்கள் அனைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் ஐ.டி. பிரிவுடன் தொடர்பில் இருந்தனர்.

அதன்படி, 687 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பதிவுகளுக்காக பேஸ்புக் பக்கம் முடக்கப்படவில்லை. அவர்களுடைய செயலுக்காகத்தான் அந்தப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கு விளக்கமளித்துள்ள காங்கிரஸ், ‘காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் எந்த அதிகாரப்பூர்வப் பக்கங்களும் முடக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் அதிகாப்பூர்வ தொண்டர்களால் நடத்தப்படும் எந்தப் பக்கங்களும் முடக்கப்படவில்லை.

அதேநேரத்தில், பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்ட பக்கங்களின் விவரங்களை தரவேண்டும் என்று அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களை அந்நிறுவனம் மொத்தமாக முடக்கியுள்ளது ஒரு அரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Also see:ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...