காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், பிரதமர் நரேந்திர
மோடியின் பிரபலமான சொற்றொடரான 'மித்ரான்' என்பதை கடும் கேலிக்குட்படுத்தியுள்ளார். தேசத்திற்கு உரையாற்றும் போது அவர் தனது உரைகளில் பயன்படுத்தும் 'மித்ரான்' என்ற சொற்றொடரை கிண்டல் செய்ததாக தெரிகிறது. ஓமிக்ரானை விட 'ஓ மித்ரான்' மிகவும் ஆபத்தானது என்று சசி தரூட் கிண்டலடித்துள்ளார்.
சசி தரூரின் இந்த கிண்டலைக் கண்டித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கூறுகையில், இது நாட்டில் நிலவும் கடுமையான கோவிட் சூழ்நிலையை மிகவும் எளிதான ஒன்றாகக் காட்டும் முயற்சியாகும். "ராகுல் காந்தி கோவிட் பற்றி தொடர்ந்து பேசுகிறார், ஆனால் காங்கிரஸ் உண்மையில் தீவிரமான சூழ்நிலையை மிகவும் எளிதாக அணுகுவதையே இது காட்டுகிறது." என்று சாடியுள்ளார்.
சசி தரூர் கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீது சூசகமான விமர்சனங்களை வைத்து வருகிறார். ஜனவரி 29 அன்று, திருவனந்தபுரம் எம்.பி.யான சசி தரூர், யோகி ஆதித்யநாத்தின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், மேலும் யோகி ஆதித்யநாத் நாட்டிற்கு எவ்வளவு சேதம் விளைவித்தார் என்பது குறித்து அவருக்கே தெரியாது என்று கூறினார். இந்த நாடு சுடுகாடாக மாறிவிட்டது"
மேலும், காங்கிரஸ் முக்த் பாரத் என்று பாஜக அடிக்கடி சொல்லுவதை கிண்டலடிக்குமாறு, பாஜக காங்கிரஸ் தலைவர்களை தன்னகத்தே கொண்டு காங்கிரஸ் யுக்த் பாஜக என்று கேலி செய்துள்ளார், அதாவது காங்கிரஸார்கள் நிரம்பிய பாஜக என்று கிண்டலடித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் ‘ஓமித்ரான்’ பேச்சு வழக்கத்தை கிண்டலடித்து தன் ட்விட்டரில் பதிவிட்ட சசி தரூர், “ஓமிக்ரானை விட அபாயகரமானது ஓமித்ரான், ஓமித்ரானின் பயங்கரமான விளைவுகளை தினசரி அடிப்படையில் நாம் பார்த்து வருகிறோம், நாட்டை பிளவுப்படுத்துதல், வெறுப்புணர்ச்சியைத் தூண்டுதல், அரசமைப்புச் சட்டத்தின் மீது தீயதான தாக்குதல், நம் ஜனநாயகத்தை சீரழிக்கும் செயல், இந்த ஓமித்ரான் வைரஸின் குறைந்த வேரியண்ட் ஏதுமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.