ஹோம் /நியூஸ் /இந்தியா /

செவிலியர் கட்டி வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட மூவர் கைது

செவிலியர் கட்டி வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட மூவர் கைது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இரவு நேர பணியிலிருந்த பெண் செவிலியரைக் கட்டி வைத்து வாயை அடைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chhattisgarh, India

  சத்தீஸ்கர் மாநிலத்தில் சுகாதார மையத்தில் இரவு நேர பணியிலிருந்த பெண் செவிலியரைக் கட்டி வைத்து, 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் மகேந்திரகர் மாவட்டம் உள்ள சிப்சிபி கிராம மருத்துவ சுகாதார மையத்தில் இரவு நேர பணியில் பெண் செவிலியர் இருந்துள்ளார். சுமார் அதிகாலை 3 மணியளவில் செவிலியர் தனியாக இருப்பதைக் கண்ட 4 நபர்கள் சுகாதார மையத்தில் நுழைந்து செவிலியரைக் கட்டி வைத்து, வாயை அடைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

  மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது குறித்து வெளியில் கூறினால் கொன்று விடுவோம் என்று செவிலியரை மிரட்டியும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண், அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரில் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

  Also Read : ’பூஜையில் நிர்வாணமாக பங்கேற்க வேண்டும்..’- மனைவியை வற்புறுத்திய கணவன்! கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

  குற்றவாளிகளான 4 பேரில் ஒருவன் 17 வயது சிறுவன் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஒரு நபர் தப்பி ஓடிய நிலையில் அவனைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அரசை எதிர்த்து பா.ஜ.க போராட்டம் நடத்திவருகின்றனர்.

  மேலும் கிராமங்களில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் பாதுக்காப்யை அதிகரிக்க ஊழியர்கள் கோரிக்கை விட்டுள்ளனர். தொடர்ந்து, மகேந்திரகர் மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மேல் கடுமையான தண்டனை வழங்கக்கோரியுள்ளார். இல்லையென்றால் சுகாதார ஊழியர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Chhattisgarh, Gang rape, Nurse