சுவாசப் பயிற்சிகள் செய்து ஒரு நுரையீரலுடன் கொரோனாவை வென்ற செவிலியர்: தன்னம்பிக்கை நாயகி!

செவிலியர் பிரஃபுலித் பீட்டர்

2014ம் ஆண்டு சிகிச்சை ஒன்றுக்காக எக்ஸ்-ரே எடுத்த போது தான் தனக்கு ஒரு நுரையீரல் மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் செவிலியர் பிரஃபுலித் பீட்டர் கூறினார்.

  • Share this:
ஒரே ஒரு நுரையீரல் மட்டும் கொண்டிருந்த போதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து நம்பிக்கையுடன் குணமடைந்துள்ளார் 39 வயது செவிலியர் ஒருவர்.

கொரோனா தனது கோர முகத்தை காட்டி ஒரு பக்கம் உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பலரும் அதனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக குணமடைந்து வருவது தொற்று மீதான அச்சத்தை போக்கி கொரோனாவில் இருந்து மீளக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

39 வயது செவிலியர் ஒருவர் சிறுவயதிலேயே ஒரே ஒரு நுரையீரலுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை அளிக்கும் விதமாக தொற்றில் இருந்து மீண்டு வந்து பிறருக்கு உத்வேகம் அளித்திருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 39 வயதாகும் பிரஃபுலித் பீட்டர் என்ற அந்த செவிலியர் திகம்கர்க் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த நிலையில் அவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். செவிவியர் பிரஃபுலித் பீட்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது பலரும் கவலை கொண்டனர். அவருக்கு ஒரே ஒரு நுரையீரல் மட்டும் தான் உள்ளது என்பதால் அவருக்கு கொரோனாவுக்கு எதிரான போராட்டம் சவால் மிகுந்த ஒன்றாக இருக்கும் என பலரும் வருத்தம் அடைந்தனர்.

இருப்பினும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருந்த செவிலியர் பிரஃபுலித் பீட்டர், வெற்றிகரமாக கொரோனாவை வென்று குணமடைந்திருக்கிறார்.

கொரோனாவிலிருந்து மீண்டது குறித்து செவிலியர் பிரஃபுலித் பீட்டர் கூறுகையில், வீட்டுத் தனிமையில் இருந்த போது நான் எனது நம்பிக்கையை இழக்கவில்லை. யோகா, பிராணயாமா, சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன். மேலும் நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் பலூன்களை ஊதி வந்தேன்.

Read more:   குடும்பத்தில் 4 பேர் பலி: மொத்த குடும்பத்தையும் கொரோனாவுக்கு பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி நிற்கும் சிறுமிகள்!

ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருந்ததால் எப்படியும் தொற்றிலிருந்து மீளுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.” என அவர் தெரிவித்தார்.

குழந்தை பருவத்தில் ஒரு சாலை விபத்தில் இவருடைய ஒரு நுரையீரலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இருப்பினும் 2014ம் ஆண்டு சிகிச்சை ஒன்றுக்காக எக்ஸ்-ரே எடுத்த போது தான் தனக்கு ஒரு நுரையீரல் மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் செவிலியர் பிரஃபுலித் பீட்டர் கூறினார்.

Read more:  சாவின் விளிம்பில் அம்மா.. வீடியோ காலில் பாட்டு பாடிய மகன்: மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!


செவிலியர் பிரஃபுலித் பீட்டர் கொரோனாவை தன்னம்பிக்கையுடன் வென்றிருப்பது பிறருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது.
Published by:Arun
First published: