உத்தரப் பிரதேச ஜான்சி ரயில் நிலையத்தில் 2 கன்னியாஸ்த்ரீகள் மற்றும் இவர்களுடன் இருந்த 2 பெண்களையும் மதம்மாற்றுவதாகக் குற்றம்சாட்டி ஆர்.எஸ்.எஸ். சார்பு இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்கிற ஏபிவிபி உறுப்பினர்கள் புகார் எழுப்ப அவர்கள் ரயிலிலிருந்து இறக்கிவிடப் பட்டனர்.
இவர்களிடமிருந்து ஆதார் எண் உள்ளிட்ட அடையாளங்களை கேட்டு மிரட்டியுள்ளனர், அவர்களும் காண்பித்தனர். இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏபிவிபி குற்றச்சாட்டு பொய் என்று தெரிந்ததையடுத்து மதமாற்றம் எல்லாம் இல்லை என்று அவர்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் மார்ச் 19-ம் தேதி நடந்தது. இது தொடர்பாக பெரும் சர்ச்சைகளும் எழுந்தது, கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இதைக் கண்டித்து கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பினராயி விஜயன் தன் கடிதத்தில், “இதில் ஈடுபட்ட எந்த அமைப்பினராக இருந்தாலும் தனிநபர் உரிமைகளில் தலையிட்டதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏபிவிபி உறுப்பினர்கள் ரிஷிகேஷ் ட்ரெய்னிங் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த 4 கிறித்துவ கன்னியாஸ்த்ரீகளும் டெல்லியிலிருந்து ஒடிசாவுக்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.
உத்கல் எக்ஸ்பிரஸில் மதமாற்றக் கும்பல் பயணிப்பதாகவும் அவர்களை உடனே ரயிலிலிருந்து இறக்கி விடுமாறும் தங்களுக்குத் தகவல் வர ஆர்பிஎஃப் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணையின் முடிவில் ஏபிவிபி குற்றச்சாட்டு பொய் என அம்பலமாகியுள்ளது.
அன்றைய தினம் ஆர்பிஎஃப் உடன் அடையாளம் தெரியாத சில நபர்களும் கன்னியாஸ்திரீகளை கேள்வி கேட்டு துன்புறுத்தியுள்ளனர், ஆதார் அட்டைகளை கேட்டுள்ளனர். யாரை இவர்கள் மதமாற்றம் செய்வதாக புகார் எழுந்ததோ அவர்கள் ஏற்கெனவே கிறித்துவர்கள் என்பதுதான் விசாரணையில் தெரியவந்தது. அதாவது கன்னியாஸ்திரீகளுடன் இருந்த 2 பேரும் பிறவி கிறித்துவர்கள் என்பது தெரியவந்ததையடுத்து பயணத்தை தொடர அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ABVP, Christian conversion, Religious conversion, Uttar pradesh