Home /News /national /

10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகளவில் கொரோனாவால் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகளவில் கொரோனாவால் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

குழந்தைகளுக்கு கொரோனா

குழந்தைகளுக்கு கொரோனா

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்த மாதம் மட்டும் மிக கடுமையாக அதிகரித்துள்ளது

கடந்த மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த 3ம் அலை தாக்கத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள் தான் என்பதை அன்றாடம் வெளியாகி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

அதிலும், கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்த மாதம் மட்டும் மிக கடுமையாக அதிகரித்துள்ளது என்பது தான் வருத்தமான செய்தி. கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் கர்நாடகாவில் கொரோனாவால் 376 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனை ஒப்பிடும்போது இந்த ஜனவரி மாதம் மட்டும் 12,800 குழந்தைகள் பாதிப்புக்குள்ளானதாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இன்னும் குறைவாக இருந்தது. வெறும் 332 குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாதங்களில் பதிவான மொத்த பாதிப்புகளை விட ஜனவரியில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. அந்த ஆறு மாத காலப்பகுதியில், மாநிலத்தில் 7,246 குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஜனவரியில் மட்டும் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 77%-திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த மாதம் முடிவதற்குள்ளாகவே குழந்தைகளின் பாதிப்பு எண்ணிக்கை இவ்வளவு எகிறியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

also read:  ஓமைக்ரான் கடைசி கோவிட் வேரியண்ட் இல்லை - WHO நிபுணர் கருத்து..

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட கோவிட்-19 பாதிப்பின் தரவு பகுப்பாய்வின்படி, கடந்த ஜனவரி 1 மற்றும் 22 க்கு இடையில், 10 வயதிற்குட்பட்ட 12,876 குழந்தைகள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பதை காட்டியது. அதன்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 585 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 16 வரை, மாநிலத்தில் சராசரியாக 350 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பாதிவாகியுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் 5,726 பாதிப்பு எண்ணிக்கை புதிதாக சேர்க்கப்பட்டன. கடந்த வாரத்தில் அந்த எண்ணிக்கையில் மேலும் 7,150 பாதிப்பு எண்ணிக்கை சேர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூட கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தின் போது 20,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு மே மாத இறுதியில் மாநிலத்தில் இந்த வயதுப் பிரிவில் சுமார் 77,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இது டிசம்பர் இறுதியில் 94,340 ஆக அதிகரித்தது. குழந்தைகளில் கொரோனா தாக்கத்தின் மொத்த பாதிப்பு ஜனவரி 16 அன்று ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், தற்போது 1.1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

Also read:  கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்

இருப்பினும், தற்போதுள்ள நோய்த்தொற்று பாதிப்பு அனைத்தும் லேசானவை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் பேசுகையில், "கடந்த மாதத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், குழந்தைகளிடையே தொற்றுநோய்களின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படும் வரிசையில் இருந்தது. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்கள் தொடர்ந்து குறைவாகவே உள்ளன. இது விஷயங்கள் இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதைக் குறிக்கிறது" என்று கூறினார்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பேச்சுகள் அம்மாநிலத்தில் எழுந்து வரும் நிலையில், இது குறித்து கர்நாடக மாநிலத்தின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறியதாவது, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள சூழலில், பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து தொற்றுநோயைப் பெறுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

Also read:  ரூ.500-க்காக குடுமிப்பிடி சண்டையிட்ட பெண் சுகாதார ஊழியர்கள்!! - வீடியோ வைரல்

தரவுகளின் விரிவான வயது வாரியான பகுப்பாய்வின்படி, ஜனவரி 22 ஆம் தேதி நிலவரப்படி 0-9 வயதிற்குட்பட்டவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மேலும், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 7.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40-49 குழுவில் உள்ளவர்கள் 5.9 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர். மீதமுள்ளவர்கள் 100 வயதுக்கு மேற்பட்ட 246 நோயாளிகள் உட்பட 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் அடங்குவர்.
Published by:Arun
First published:

Tags: Corona, Covid-19

அடுத்த செய்தி