முகப்பு /செய்தி /இந்தியா / என்.டி.ராமராவ் பேரன் தாரக ரத்னா மாரடைப்பால் உயிரிழந்தார்!

என்.டி.ராமராவ் பேரன் தாரக ரத்னா மாரடைப்பால் உயிரிழந்தார்!

தாரக ரத்னா

தாரக ரத்னா

கடந்த 22 நாட்களாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.டி.ராமராவ் பேரன் தாரக ரத்னா (39) உயிரிழந்தார்.

என்டி ராமராவ் பேரன்களில் ஒருவரான திரைப்பட நடிகர் தாரக ரத்னா கடந்த மாதம் 26 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு மகன் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளர் நாரா லோகேஷ் குப்பம் தொகுதியில் இருந்து தொடங்கிய பாதயாத்திரையில் கலந்து கொண்டார்.

அன்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தெலுங்கு தேசம் கட்சியினர் குப்பத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த 22 நாட்களாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 23 ஆம் நாளான இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். தாரக ரத்னா மரணத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அக்கட்சியின் தேசிய செயலாளர் நாரா லோகேஷ், என்டி ராமராவ் குடும்பத்தினர், கட்சி பிரமுகர்கள், திரைத்துறையினர், மாற்று கட்சியினர் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Andhra Pradesh, Chandrababu naidu, Death