முகப்பு /செய்தி /இந்தியா / ரத்த அழுத்தம், சரக்கரை நோய்... அதிரடியாக குறைந்த மருந்துகளின் விலை... எவ்வளவு தெரியுமா?

ரத்த அழுத்தம், சரக்கரை நோய்... அதிரடியாக குறைந்த மருந்துகளின் விலை... எவ்வளவு தெரியுமா?

மாத்திரைகள்

மாத்திரைகள்

National Pharmaceutical Pricing Authority | ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளின் விலையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு அமைப்பு மருந்துகளின் விலை எவ்வளவு என்பதை தீர்மானிக்கிறது. இந்த அமைப்பின் 109வது கூட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 74 மருந்துகளின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தப்படும் telmisartan மற்றும் இதயநோய்க்கு பயன்படுத்தப்படும் bisoprolol fumarate மாத்திரைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் உடனுக்குடன் 

இந்த 2 மருந்துகளின் விலையும் ஒரு மாத்திரை அதிகபட்சம் 10 ரூபாய் 92 காசுகளுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எபிலெப்சி எனப்படும் வலிப்பு நோய் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 80 மருந்துகள் அத்தியாவசியமானவை என்ற பட்டியலில் NPPA அறிவித்துள்ளது. நாடு முழுக்கவும் அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைக்க போதுமான ஏற்பாடுகளை செய்யவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

First published:

Tags: Medicines