ரயில் பயணிகள் இனி ஐஆர்சிடிசி தளம் மூலம் மாதம் தோறும் 24 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதுவரை மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு இருந்த நிலையில், அது இரட்டிப்பாக்கப்பட்டு 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தங்கள் ஐஆர்சிடி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
அதேபோல் ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள் இதுவரை 6 டிக்கெட்டுகள் தான் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது அதை 12 ஆக உயர்த்தி ஐஆர்சிடிசி உத்தரவிட்டுள்ளது.
இந்த முடிவால் தங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பெறுவார்கள் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி
1. முதலில் ஐஆர்சிடிசியின் அதிகார்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
2. உங்கள் அக்கவுன்டில் லாக் இன் செய்ய வேண்டும்
3. பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள மை அக்கவுன்ட் என்பதை கிளக் செய்ய வேண்டும்
4. அதில் லிங்க் யுவர் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
5. பின்னர் உங்கள் ஆதார் எண் தொடர்பான விவரங்களை பதிவிட்டு, ஓடிபி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
6. பின்னர் உங்கள் மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்து அதை வெரிபை செய்ய வேண்டும்.
7. உங்கள் KYC விவரங்களை சரிபார்த்த பின்னர் ஆதார் இணைப்பு நிறைவு பெறும்.
Published by:Kannan V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.