அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இனி இடம்பெறாது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி, தன்னுடைய அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் கெஜ்ரிவால் பின்னர் உரையாற்றினார். அப்போது, டெல்லியில் கொரோனா பாசிடிவிட்டி விகிதம் கடந்த 10 நாட்களில் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Also read: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
தினசரி சோதனை நேர்மறை விகிதம் ஜனவரி 15 அன்று 30 சதவீதமாக இருந்து தற்போது சுமார் 10 சதவீதமாக ஆக குறைந்துள்ளது. தடுப்பூசியின் சீரான வேகம் காரணமாக இது சாத்தியமானது.
நாங்கள் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிப்போம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் இனி முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறாது.
அதற்குப் பதிலாக, டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள் இடம்பெறும். அவர்களின் கனவான முற்போக்கு மற்றும் வளமான இந்தியாவை நோக்கி உழைக்க இது நம் அனைவரையும் ஊக்குவிக்கும்' என்று அவர் கூறியுள்ளார்.
Also read: காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்த பிரபலம் பாஜகவில் இணைந்தார்!!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.