ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க RTO அலுவலகம் செல்ல தேவையில்லை... இனி எல்லாம் ஆன்லைன் சேவை தான்!

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க RTO அலுவலகம் செல்ல தேவையில்லை... இனி எல்லாம் ஆன்லைன் சேவை தான்!

ஓட்டுநர் உரிமம் (மாதிரி படம்)

ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் தொடர்பான சில சேவைகள் முற்றிலும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் (MORTH) நேற்று மக்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டது. அதாவது, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், வாகன பதிவு செய்தல், கற்பவரின் உரிமத்தைப் பெறுதல் உள்ளிட்ட 18 சேவைகளுக்கு மக்கள் இனி ஆர்டிஓ அலுவலகத்தை பார்வையிட தேவையில்லை என்று கூறியுள்ளது. அதற்கு பதிலாக, குடிமக்களுக்கு வசதியான மற்றும் தொந்தரவில்லாத சேவைகளை வழங்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி மக்களுக்கு ஆதார்-அங்கீகார (Aadhaar-authentication) அடிப்படையிலான தொடர்பு இல்லாத சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் (MORTH) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் தொடர்பான சில சேவைகள் முற்றிலும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இனி இந்த சேவைகளை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமலேயே நீங்கள் பெறலாம். ஆதார் அங்கீகாரத்துடன், தன்னார்வ அடிப்படையில், இந்த தொடர்பு இல்லாத சேவைகளின் பயனை யார் வேண்டுமானாலும் பெறலாம் ”என்று குறிப்பிட்டுள்ளது.



ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.யை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 12 இலக்க தனித்துவமான ஆதார் அடையாள எண்ணுடன் இணைப்பதற்கான வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட பின்னர் இந்த புதிய முறை பயன்பாட்டிற்கு வரும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து நெடுசாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு பதிவில், “இது குடிமக்கள் மீதான இணக்கச் சுமையைக் குறைக்கும். மேலும் இந்த சேவைகளை தொந்தரவில்லாமல், எளிதான முறையில் பெற மக்களுக்கு உதவும். இது ஆர்டிஓ அலுவலகத்தில் மக்கள் அதிகம் கூடுவதை குறைக்கும். இதனால் ஆர்டிஓ அலுவலகங்களின் செயல்திறனை மேலும் அதிகரிக்க முடியும்”என்று அமைச்சகம் தனி ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.

Also read... உங்கள் பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது? முழு விவரம்!

ஆதார் அங்கீகாரம் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆன்லைன் சேவைகள் குறித்து காண்போம்:

1. கற்பவரின் உரிமத்தைப் பெறுதல் (Leaner's Licence)

2. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல். எந்த வாகனத்தையும் ஓட்டும் திறனுக்கான சோதனை தேவையில்லாத உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.

3. நகல் ஓட்டுநர் உரிமம்

4. ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் முகவரி மாற்றம்

5. சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்கல்

6. உரிமத்திலிருந்து வாகனத்தின் வகுப்பினை சரண்டர் செய்தல்.

7. மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

8. மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

9. பதிவுக்கான நகல் சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம்

10. பதிவு சான்றிதழ் பெற NOC வழங்குவதற்கான விண்ணப்பம்

11. மோட்டார் வாகனத்தின் உரிமத்தை மாற்றுவதற்கான அறிவிப்பு

12. மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்

13. பதிவு சான்றிதழில் முகவரி மாற்றத்தின் தகவல்

14. அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சி பெறும் பதிவுக்கான விண்ணப்பம்

15. டிப்ளோமாட்டிக் அதிகாரியிடம் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

16. டிப்ளோமாட்டிக் அதிகாரியிடம் மோட்டார் வாகனத்தின் புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பம்

17. வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒப்புதல்

18. வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் முடிவு.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: