நந்திகிராமில் சொந்தத் தொகுதியை மம்தா இழந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி என்ற ஆளுமையை 2021 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்த்துப் போராட மம்தா பானர்ஜிதான் சரி என்று எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நம்பிக்கைப் பிறந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்புக்குச் சென்று விட்ட நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வேறு என்னதான் வழி? மம்தாவுக்கு இந்த 5 ஆண்டு கால ஆட்சி சவாலாகவே அமையும் ஏனெனில் எதிர்க்கட்சியாக 77 இடங்களுடன் பாஜக அமரும்போது மம்தாவுக்கு அது நிச்சயம் ஒரு பெரிய போராட்டமாகவே அமையும், நிச்சயம் தோல்வியை பாஜக லேசாக எடுத்துக் கொள்ளாது.
அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு இணங்கவே அமைந்தன. ஆனால் மேற்கு வங்க அரசியலின் பரபரப்பு, பொறிபறக்கும் பிரச்சாரங்களினால் அரசியல் நோக்கர்களும் மக்களுமே மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கினர். இந்த எதிர்பார்ப்பில் மம்தா 200 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி சாதித்துள்ளார்.
இந்த வெற்றி ஒரு புத்துணர்ச்சியை பலருக்கும் தந்துள்ளது, எதிர்க்கட்சியினருக்கு மோடி விமர்சகர்களுக்கு ஒரு அபாரமான ஆற்றலை வழங்கியுள்ளது, மம்தாவே உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் மக்களுக்குரிய பிரச்சனைகள் பலவிருந்தாலும் தேர்தல் மம்தாவா மோடியா என்ற எதிர்நிலையின் பரபரப்புகளுக்கு உட்படுத்தப்பட்டன. மம்தாதான் வெற்றி பெறப்போகிறார் என்றவுடன் மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற லட்சியங்களுடன் இருக்கும் எதிர்க்கட்சிகள் வரும் காலங்களில் மோடியை எதிர்க்க மம்தாதான் சிறந்த நபர் என்று முடிவெடுத்து விட்டனர். ஆனாலும் நந்திகிரானில் மம்தாவின் தோல்வி எதிர்க்கட்சிகளின் இந்த உற்சாகங்களை சற்றே தணித்துள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகே அவரைப்போன்ற ஒரு ஆளுமை அதிமுகவில் இல்லை இதனால் அதிமுகவா திமுகவா என்ற நிலை ஏற்பட இந்த முறை மக்கள் திமுகவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் இதுவும் கூட அதிமுக ஆட்சி பாஜகவினால் இயக்கப்பட்ட ஆட்சி என்று மக்கள் முடிவெடுத்ததும் அதிமுக தோல்வியை பாஜகவின் தோல்வியாகவே பார்க்க பலரையும் அழைக்கிறது.
மேற்கு வங்கத்தில் தனது அனைத்து ஆற்றல்களையும் பாஜக செலவிட்டது. ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு முறையான கட்சி அமைப்பு இல்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்லாமலே போட்டியிட்டதும் அமித் ஷா, மோடி பிரச்சாரம் இந்துக்களின் வாக்குகள் ஆகியவை மட்டுமே போதும் என்று களமிறங்கியதும் அதன் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
முஸ்லிம்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை புறக்கணிக்க முடியாது. எந்தக் கட்சி பாஜகவை தோற்கடிக்குமோ அந்தக் கட்சியுடன் அவர்கள் சென்றார்கள். முன்னாள் இடதுசாரிகளுடன் இருந்த முஸ்லீம்கள் இப்போது மம்தாவுடன் கரம் கோர்த்துவிட்டனர்.
மம்தா அதிகாரத்தில் இருந்ததால் அவர்களுக்காக சிலபல நலத்திட்டங்களையும் செய்தார். மேலும் சக்கரநாற்காலியில் அமர்ந்தபடியே பாஜக தன்னை அழிக்கப்பார்ப்பதான ஒரு பிம்பத்தை தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டு வந்தார். ஆனாலும் பாஜக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருப்பதால் மேற்கு வங்கத்தில் சில பிரிவினர் பாஜக, மோடி தங்களுக்கு நன்மை செய்வார்கள் என்று கருதியிருப்பதன் பிரதிபலிப்பே.
மம்தாவுக்கும் மோடிக்குமான இந்த போட்டியில் காங்கிரஸ் மம்தா வெற்றியை ஆதரிக்கவே செய்யும். ஆனால் காங்கிரஸ் விளிம்புக்குச் சென்று விட்டதையும் கூட அந்தக் கட்சி மம்தாவின் வெற்றியில் மறைத்துக் கொள்ள பார்க்கும்.
ஆகவே இந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலையும் மோடிக்கும் மம்தாவுக்குமான போட்டியாக உருவாக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி. பாஜகவை எதிர்கொள்ளும் கட்சிகள் தற்போது மம்தாவை தங்கள் மீட்பராகப் பார்க்கும். ஒரு முறை சந்திரபாபு நாயுடு, இன்னொரு முறை நிதிஷ் குமார், ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி என்று எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தங்களுக்கான தலைவரின் தேடலில் ஈடுபட்டு முடிவுகள் எடுத்தன. இப்போது எதிர்க்கட்சிகளின் புதிய தலைவர் மம்தா பானர்ஜிதான்.
உண்மையான எதிரி கொரோனாவாக இருக்க மேற்கு வங்க திரிணாமூல் வெற்றியை தற்போது மோடி எதிர்ப்பாளர்கள் ‘செக்யூலரிசத்தின்’ வெற்றியாக கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election Result, Mamata banerjee, Modi, West Bengal Assembly Election 2021