ரயிலை தொடர்ந்து விமான போர்டிங் பாஸில் மோடி படம்...!

2019 மார்ச் 20-ம் தேதி இதே போன்று பிரதமர் மோடி புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்த ரயில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு இருந்தது குறித்து திரினாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

news18
Updated: March 25, 2019, 3:37 PM IST
ரயிலை தொடர்ந்து விமான போர்டிங் பாஸில் மோடி படம்...!
போர்டிங் பாஸ்
news18
Updated: March 25, 2019, 3:37 PM IST
மக்களவை தேர்தல் சமயத்தில் விமான போர்டிங் பாஸில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி படங்கள் அச்சிடப்பட்டு இருந்தது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னால் டிஜிபியான சஷி காந்த் திங்கட்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “2019 மார்ச் 25 இன்று டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி படங்கள் அச்சிடப்பட்ட வைப்ரண்ட் குஜராத் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பணத்தை ஏன் இப்படி வீண் அடிக்கிறோம் தேர்தல் ஆணையமே” என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...


இந்த ட்விட்டர் பதிவு குறித்து விளக்கம் அளித்த ஏர் இந்தியாவின் செய்தித்தொடர்பாளர் தனஞ்ஜெய் குமார், “இது மூன்றாம் தரப்பினர் அளித்த விளம்பரம். ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த விளம்பரத்துடன் கூடிய போர்டிங் பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் தேர்தல் விதிமுறைக்குள் வரும் எனில் அதை உடனே நீக்கிவிடுகிறோம் என்று கூறினார்.

2019 மார்ச் 20-ம் தேதி இதே போன்று பிரதமர் மோடி புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்த ரயில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு இருந்தது குறித்து திரினாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

இந்த புகாரை அடுத்து இந்த ரயில் டிக்கெட்டை விநியோகம் செய்ய வேண்டாம் என்று அனைத்து ரயில் கோட்டங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...