தொடரும் கும்பல் தாக்குதல்! இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்

மாநிலங்களைவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத், ‘உங்களுடைய புதிய இந்தியாவில் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது என்று காட்டமாக கூறினார்.

news18
Updated: June 26, 2019, 11:26 PM IST
தொடரும் கும்பல் தாக்குதல்! இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்
ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
news18
Updated: June 26, 2019, 11:26 PM IST
ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், இன்று #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில், கடந்த 18-ம் தேதி 24 வயது இளைஞர் அன்சாரியைத் திருடன் என்று கருதி அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியது ஒரு கும்பல். அந்த இளைஞரை 'ஜெய் ஶ்ரீராம்', 'ஜெய் ஹனுமான்' என்று சொல்லச் சொல்லி, மரத்தில் கட்டிவைத்து சுமார் 12 மணி நேரம் அடித்துள்ளனர். அன்சாரி மயங்கிச் சரியும்வரை, பலமாகத் தாக்கியுள்ளனர்.

உயிரிழந்த அன்சாரி


தாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலனின்றி ஜூன் 24-ம் தேதி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்துவந்தன. மாநிலங்களைவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத், ‘உங்களுடைய புதிய இந்தியாவில் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது என்று காட்டமாக கூறினார்.

அதற்கு விளக்கமளித்த பிரதமர் மோடி, ‘ஒரு சிலர் செய்யும் தவறுக்காக மாநிலத்தையே குற்றம் சாட்டுவது சரியல்ல’ என்று பேசியிருந்தார். அன்சாரியை கம்பத்தில் கட்டிவைத்திருக்கும் புகைப்படம் காண்போரை கலங்கச்செய்தது. அதேபோல,

மேற்குவங்கத்தில், கடந்த வாரம் 'ஜெய் ஶ்ரீராம்' என்று கூறுமாறு வலியுறுத்தி, ஹஃபீஸ் என்ற இளைஞர் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக ட்விட்டரில், `நோ டு ஜெய்ஸ்ரீராம்’ #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது. `மதத்தைக்கொண்டு அரசியல் செய்வதை நிறுத்தங்கள்’ என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Loading...
Also see:

First published: June 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...