தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார். இதேபோன்ற நோட்டீஸ் மாநிலங்களவையில் திருச்சி சிவாவால் அளிக்கப்பட்டுள்ளது
.முன்னதாக திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் இதுதொடர்பாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். அதில், ''தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி, குடியரசு தலைவர் ஆகியோர் ஏற்காத காரணத்தால் அவை முடங்கியுள்ளன.
நீட் விலக்கு விவகாரத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். சட்டமன்றங்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கேடுவை நிர்ணயிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று, எம்.பி. வில்சன் தனது மசோதாவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க - தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியத்தை அதிமுக உருவாக்கும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
இதன் தொடர்ச்சியாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள நோட்டீசில், 'பொறுப்பு மற்றும் கடமைகளை கவர்னர் ஆர்.என்.ரவி நிறைவேற்ற தவறி விட்டதாக' குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - குப்பை கிடங்கில் 3 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்த தீ.. வாகன ஓட்டிகள் சிரமம்
இதேபோன்று மாநிலங்களவையில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் திமுக குழு தலைவர் திருச்சி சிவா கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை அளித்துள்ளார். 7 பேர் விடுதலை விவகாரம், நீட் தேர்வு விலக்கு மசோதா ஆகியவைகள் மீது கவர்னர் ரவி முடிவெடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார்.
சமீபத்தில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படட19 நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ஆர்.என். ரவி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.