ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலக புகழ்பெற்ற ‘மைசூர் தசரா விழா’ - தொடக்க விழாவில் குடியரசுத்தலைவர் முர்மு பங்கேற்பு

உலக புகழ்பெற்ற ‘மைசூர் தசரா விழா’ - தொடக்க விழாவில் குடியரசுத்தலைவர் முர்மு பங்கேற்பு

மைசூர் தசராவை தொடங்கி வைக்கும் முர்மு

மைசூர் தசராவை தொடங்கி வைக்கும் முர்மு

மைசூரில் உள்ள எட்டு இடங்களில் மொத்தம் 290 கலாச்சார நிகழ்ச்சிகள் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mysore, India

மைசூரில் தசரா திருவிழா இன்று  தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளதால் அரண்மனைகளின் நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட்-19 காரணமாக எந்தவித கொண்டாட்டமும் இல்லாத நிலையில் , தசரா இந்த ஆண்டு பெரியதாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்பட உள்ளது.

வரலாறு :

மைசூரில் உள்ள தசரா என்பது 14 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்த விஜயநகர பேரரசர்களின் பாரம்பரியமாகும். விஜயநகர ஆட்சியாளர்களால் கொண்டாடப்படும் நவராத்திரியின் மகத்துவம் 1442 மற்றும் 1443 க்கு இடையில் விஜயநகருக்கு வந்த  பாரசீகத்தின் அப்துர் ரசாக் போன்ற இடைக்கால பயணிகளால் விவரிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த டொமிங்கோ பயஸ் (1520-22) மற்றும் ஃபெர்னாவ் நுனிஸ் (1535-37) ஆகியோர் "பிஸ்னகாவின் மாபெரும் விருந்து" என்று விஜயநகரில் நேரில் கண்ட சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

இன்று வழக்கத்தில் உள்ள பாரம்பரியம் மைசூருவின் வாடியார்களால் தொடங்கப்பட்டது. 1610 CE இல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அரியணை ஏறிய ராஜா வாடியார், நவராத்திரியை பெரிய அளவில் கொண்டாட உத்தரவிட்டார்.

1799 இல் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, ராஜ்ஜியம் வாடியார்கள் கைகளுக்கு மீண்டும் சென்றது. மேலும் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டணாவிலிருந்து தற்போதைய மைசூருக்கு மாற்றப்பட்டது.

1902 முதல் 1940 வரை ஆட்சி செய்த நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் காலத்தில்தான் மைசூர் தசராவின் பிரம்மாண்டம் உச்சக்கட்டத்தை எட்டியது, இந்த பிரம்மாண்டம் அம்பா விலாச அரண்மனையின் சுவரோவியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது

நாடா ஹப்பா:

கர்நாடகாவில் நாடா ஹப்பா என்ற பெயரில் கொண்டாடப்படும் நவராத்திரி - தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெறும். மைசூர் நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வீதிகளின் யானையின் மீது ஊர்வலங்கள் நடக்கும். இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ஒரு நிகழ்வாகும்.

மைசூருவில், சாமுண்டேஸ்வரி தேவியால் மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததைக் குறிக்கும் தசரா, தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. ஆனால் அதன் மத அடிப்படைகளைத் தவிர, இந்த விழா மாநிலத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு தளமாக உருவெடுத்துள்ளது.

நவராத்திரி விரதம் நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்குமா? அறிவியல் காரணங்கள் இதோ!

290 நிகழ்வுகள்

மைசூரில் உள்ள எட்டு இடங்களில் மொத்தம் 290 கலாச்சார நிகழ்ச்சிகள் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளன. இறுதி நாளான , அக்டோபர் 5 ஆம் தேதி, தங்க ஹவுடாவை சுமந்து செல்லும் யானைகளின் ஜம்பூ சவாரி, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான டார்ச்லைட் அணிவகுப்பு நடைபெறும்.

இந்த ஆண்டு தசரா திருவிழாவில் இந்தியாவின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார். இன்று முதல் இம்மாதம் 28ம் தேதி வரை கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்திய குடியரசுத் தலைவர் என்ற முறையில் அவர் இந்திய மாநிலத்துக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Dasara festival in mysore, Draupadi Murmu, Dussera, Navarathri