100 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை...! ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை

100 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை...! ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை
News18
  • News18
  • Last Updated: January 18, 2020, 8:56 PM IST
  • Share this:
ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான தண்டனையை போக்குவரத்து போலீசார் விதித்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும், பல மாநிலங்கள் இந்த சட்டத்தை தற்போது வரை அமல்படுத்தவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.


ஹெல்மெட் அணியாததால் பிடிபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என்ற காரணத்தை சுருக்கமாக 100 வார்த்தைகளில் எழுதித்தருமாறு அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம் ஹெல்மெட் அணியாதவர்கள் எண்ணிக்கை குறையும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்