கொரோனா அதிகரிப்பை தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல - அமித் ஷா

அமித்ஷா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் அதிகரித்து வருவதை தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் அதிகரித்து வருவதை தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 2.61 லட்சத்தை கடந்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்தது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும். ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

  அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. மேற்குவங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி மூன்று சுற்றுகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதனிடையே, கொரோனா தொற்று பரவல் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையிலும், தேர்தலை ஒத்திவைக்காமல் இருப்பதும், பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்யாமல் தொடர்வதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, தேர்தல் நடைபெறாத மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெறுகிறதா? அங்கு 60,000 பேர் தொற்று பாதிப்படைகின்றனர். அதேநேரத்தில் மேற்குவங்கத்தில் 4,000 பேர் பாதிப்படைகின்றனர். நான் இரண்டு மாநிலங்களை பற்றியும் கவலைப்படுகிறேன். தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.. அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

  தற்போதைய நிலையில் உடனடியாக அரசு லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆரம்பித்தில் இருந்த நிலைமை வேறு தற்போதைய நிலைமை வேறு. அப்போது, போதிய உள்கட்டமைப்பு, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் நம்மிடம் இல்லை. இப்போதைய நிலைமை வேறு. மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுடன் கலந்துரையாடி ஒருமித்த கருத்து என்னவாக இருந்தாலும் அதற்கேற்ப செயல்படுவோம் என்று அவர் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: