பெண்ணின் கையில் டாட்டூவை பார்த்த நீதிபதி: பாலியல் வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்!

பாலியல் வன்புணர்வு

குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரை அப்பெண் தனது கையில் பச்சை குத்தியுள்ளார். டாட்டூ குத்துவது என்பது அத்தனை எளிதல்ல. என் கருத்துப்படி டாட்டு குத்துவது ஒரு கலை, அதற்காக விஷேசமான இயந்திரம் தேவைப்படும்.

  • Share this:
வழக்கு தொடுத்த பெண்ணின் கையில், பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு ஆளான நபரின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததால் அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக தனக்கு அறிமுகமான நபர் ஒருவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் மீது விசாரணை நடைபெற்றது. அதில் அந்த நபர் தன்னை மிரட்டியும், வற்புறுத்தியும் பல முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். 2016 முதல் 2019ம் ஆண்டு வரை தான் இந்த இன்னலை சந்தித்ததாகவும் அர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், ஒருமித்த உறவில் இருவரும் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து தன் மீது அப்பெண் காவல்நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட நபர் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக குற்றம் சுமத்திய பெண்ணின் கையில் தன்னுடைய பெயர் பச்சை (டாட்டூ) குத்தப்பட்டதற்கான ஆதாரமாக புகைப்படங்கள், இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்கள், மாலை மாற்றிக்கொண்ட புகைப்படங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஃபேஸ்புக்கில் நட்பு அனுமதி கோரிய friend request போன்றவற்றை ஆதாரமாக அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஜ்னீஷ் பாத்நகர், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு குறித்து அவர் சில கருத்துக்களையும் தெரிவித்தார். அதில், “குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரை அப்பெண் தனது கையில் பச்சை குத்தியுள்ளார். டாட்டூ குத்துவது என்பது அத்தனை எளிதல்ல. என் கருத்துப்படி டாட்டு குத்துவது ஒரு கலை, அதற்காக விஷேசமான இயந்திரம் தேவைப்படும். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிண் கையில் அவர் குற்றம் சுமத்தியவரின் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. சிறிது எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த வகையில் இப்படி பச்சை குத்தியிருக்க முடியாது” என தெரிவித்தார்.
Published by:Arun
First published: