Home /News /national /

மத்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை - டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடா

மத்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை - டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடா

மனிஷ் சிசோடியா

மனிஷ் சிசோடியா

ரெய்டு முடிந்த சில மணி நேரங்களில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டெல்லி கவர்னர் விகே சக்ஸேனா உத்தரவிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    மத்திய அரசு சிபிஐயை தவறாக பயன்படுத்துகிறது எனவும்  ரெய்டுக்கு எல்லாம் தாங்கள் அஞ்சப்போவது இல்லை என டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

    டெல்லி துணை முதலமைச்சரும் கலால் துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்றைய தினம் சிபிஐ சோதனை நடத்தியது. புதிதாக கொண்டு வரப்பட்ட மது கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி நடத்தப்பட்ட சோதனை, நேற்று காலை தொடங்கி 14 மணி நேரம் நடைபெற்றது.

    இந்த சோதனையில் மனிஷ் சிசோடியாவின் கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் சில ஆவணங்களை சிபிஐ கைபற்றி சென்றதாக மனிஷ் தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணைக்கு தானும் தன் குடும்பமும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தொடர்ந்து ஒத்துழைப்போம் எனவும் தெரிவித்தார்.



    “நாங்கள் ஊழல் செய்யவில்லை எனவே எங்களுக்கு பயம் இல்லை” என தெரிவித்த அவர், மத்திய அரசு சிபிஐயை தவறாக பயன்படுத்துப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

    மேலும் அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ டெல்லியின் கல்வி மாடல் குறித்து முதல் பக்கத்தில் அச்சிட்டுள்ளது எனவும் இது இந்தியாவிற்கு பெருமையான தருணம் எனவும் குறிப்பிட்டார். இதற்கு முன் இவ்வாறு முதல் பக்கத்தில் இந்தியா வந்தது, ஒன்றரை ஆண்டிற்கு முன், கங்கை நதி அருகே ஆயிரக்கணக்கான பிணங்கள் எரிக்கப்பட்ட போது தான் எனவும் குறிப்பிட்டார். இது போல் டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் சிறப்பான செயல்பாடுகளை தடுக்கவே மத்திய அரசு இவ்வாறு ரெய்டு நடத்துவதாகவும் கூறினார்.



    டெல்லி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மனிஷ் சிசோடா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து ரெய்டு முடிந்த சில மணி நேரங்களில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டெல்லி கவர்னர் விகே சக்ஸேனா உத்தரவிட்டார்.
    Published by:Siddharthan A
    First published:

    அடுத்த செய்தி