ஹோம் /நியூஸ் /இந்தியா /

அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை - ராம்தாஸ் அத்வாலே

அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை - ராம்தாஸ் அத்வாலே

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

  • News18
  • 2 minute read
  • Last Updated :

மத்திய அமைச்சராக இருப்பதால் தன்னை பெட்ரோல், டீசல் விலை உயர்வு எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

பெட்ரோல் - டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜெய்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையைச் சேர்ந்த அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது: “நான் ஒரு அமைச்சராக இருப்பதால், எரிபொருளின் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லைநான் என் மத்திய அமைச்சர் பதவியை இழந்தால் கடுமையாக பாதிக்கப்படுவேன்” என்று கூறினார்.

ஆனால், பெட்ரொல் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும், அவற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதையும் அவர் தெரிவித்தார். மேலும் மாநிலங்களின் வரியை குறைத்தால் எரிபொருள்களின் விலை குறைக்கப்படும் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சரமாறியாக தாக்கி எழுதியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தை போரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்காத காரணத்தால்தான் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்று கூறினார்.

First published:

Tags: Fuel Price hike, Petrol Diesel Price hike, Petrol Price hike, Ramdoss Athawale