Home /News /national /

குளிர்கால கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத பிரதமர் மோடி!

குளிர்கால கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத பிரதமர் மோடி!

குளிர்கால கூட்டத் தொடர்

குளிர்கால கூட்டத் தொடர்

குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளாதது தொடர்பாக மாநிலங்கள் அவை  எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்கவும் ...
    குளிர்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று அனைத்துக் கட்சி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளாதது குறித்து மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. இதில், வேளாண் சட்டம் ரத்து மசோதா, கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா உட்பட 26 மசோதாக்களை  மத்திய அரசு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை கூடவுள்ள நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் பங்கேற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி,  ஆனந்த் சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரைன், சுதீப் பந்தோபாத்யாய், திமுகவின் டி.ஆர். பாலு, திருச்சி சிவா,  தேசிய காங்கிரஸ் கட்சியின்  சரத் பவார்,  சிவசேனாவின் வினாயக் ராவத், தேசிய மாநாடு கட்சியின் ஃபருக் அப்துல்லா உட்பட பல்வேறு தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளாதது தொடர்பாக மாநிலங்கள் அவை  எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கும் மரபு, மோடி பிரதமரான பிறகு தொடங்கி வைக்கப்பட்டது.  இதுபோன்ற கூட்டத்திற்கு கடந்த காலங்களில் வேறு எந்தத் தலைவர்களும் வரமாட்டார்கள். பிரதமர் மோடி தொடங்கி வைத்த பாரம்பரியம் இது. இந்தக் கூட்டத்திற்கு வேறு யாரும் வரவில்லை, எனவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது நியாயமில்லை. இன்று இந்த கூட்டத்திற்கு பிரதமரால் வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: அனைத்து முன்னணி ஆடியோ தளங்களில் பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி பதிவேற்றம்


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Parliament Session, PM Narendra Modi

    அடுத்த செய்தி