ஊரடங்கு அச்சம் : சொந்த ஊர்களை நோக்கி செல்லும் வடமாநில தொழிலாளர்கள்!

ஊரடங்கு அச்சம் : சொந்த ஊர்களை நோக்கி செல்லும் வடமாநில தொழிலாளர்கள்!

ஊரடங்கு

கொரோனா தொற்று அதிகரிப்பால் கோவையில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி வருகின்றனர். இதனை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்முனைவோர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 • Share this:
  கோவை, திருப்பூர் போன்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் செயல்படக்கூடிய மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்தாண்டு திடீரென அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால், தமிழகத்தில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வரத் தொடங்கினர். இதனால், கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் முடங்கிக் கிடந்த, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை மீளத் தொடங்கின.

  இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், கோவையில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடி ஆளாகியுள்ளதாகவும், மீண்டும் தொழில் முடங்கினால் அதிலிருந்து மீள்வது மிகக் கடினம் எனவும் தொழில்முனைவோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

  தொற்சாலைகளில் கொரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு பாதுகப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனாலும், கொரோனாவை காட்டிலும், ஊரடங்கிற்கே வடமாநில தொழிலாளர்கள் அதிகம் அச்சப்படுவதாகவும் தொழில்முனைவோர்கள் தெரிவிக்கின்றனர்.

  வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தடுக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்துவதோடு, ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படாது என உறுதி அளிக்குமாறும், தொழில்முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: