ஹோம் /நியூஸ் /இந்தியா /

அணு ஆயுதம் மூலம் பதிலடி தருவோம்... எதிரி நாடுகளுக்கு கிம் ஜாங் உன் எச்சரிக்கை!

அணு ஆயுதம் மூலம் பதிலடி தருவோம்... எதிரி நாடுகளுக்கு கிம் ஜாங் உன் எச்சரிக்கை!

கிம் ஜாங் யுன்

கிம் ஜாங் யுன்

வட கொரியாவை அச்சுறுத்தும் நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி தர தயாராக உள்ளோம் என அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaPyongyangPyongyang

  வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

  எனவே, இந்த நாடுகளுக்கு எதிராக தனது ராணுவ ஆயுத பலத்தை காட்ட அடிக்கடி ஏவுகணை சோதனைகள் மேற்கொள்வதை வாடிக்கையாக வடகொரியா கொண்டுள்ளது. குறிப்பாக தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவே இந்த சோதனையை வடகொரியா மேற்கொள்கிறது. அணு ஆயுதங்களை சோதிக்க கூடாது என்று உலக அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வடகொரியா சோதித்து வருகிறது. இந்தாண்டில் மட்டும் 25க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

  இதை ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தருகின்றன. இதை பற்றி கவலைபடாமல் நேற்றும் மீண்டும் ஒரு முறை கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகனை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். வட கொரியாவில் இருந்து அமெரிக்காவை தாக்கும் விதமாக 1000 கிமீ தூரம் வரை பாயும் திறன் கொண்டது.

  இந்த சோதனைக்குப் பின்னர் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரிய அரசு ராணுவம் பலமிக்கதாக உள்ளது. எங்களுக்கு அச்சுறுத்தல் விடுவோருக்கு அணு ஆயுதம் மூலம் பதில் சொல்ல தயாராக உள்ளோம்.

  இதையும் படிங்க: 77 ஆண்டுகள் கழுத்தில் புல்லட்டுடன் உயிர் வாழும் 95 வயது போர் வீரர்! மருத்துவர்கள் அதிர்ச்சி

  முழு அளவில் மோதல் நிகழ்ந்தாலும் அதை எதிர்கொள்ள வட கொரியா தயாராக உள்ளது என்றார். நேற்று நடைபெற்ற ஏவுகணை சோதனையின்போது அதிபர் கிம் தனது மகளை அழைத்து வந்து ஏவுகணை பார்வையிட்டார். அதிபர் கிம்மின் மகள் முதல் முதலாக பொதுவெளியில் வருவது இதுவே முதல் முறை. அவரின் பெயர் ஜு ஏ எனக் கூறப்படுகிறது. அந்நாட்டின் அதிகாரப் பொறுப்பில் கிம்மின் குடும்பம் தான் முழு ஆதிக்கம் செலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  Published by:Kannan V
  First published:

  Tags: North korea, Nuclear