ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஏவுகணை செலுத்தி ஜப்பானை அச்சுறுத்தும் வடகொரியா.. உஷார் நிலையில் ராணுவம்... பதற்றத்தில் மக்கள்

ஏவுகணை செலுத்தி ஜப்பானை அச்சுறுத்தும் வடகொரியா.. உஷார் நிலையில் ராணுவம்... பதற்றத்தில் மக்கள்

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் அதிர்ச்சி அடைந்த ஜப்பான் தன்னாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, Indiatokyotokyo

  ரஷ்யா - உக்ரைன் போரால் உலக நாடுகள் பதற்றமான சூழலில் உள்ள நிலையில், வடகொரியாவும் தற்போது தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் யுன்னின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

  எனவே, இந்த நாடுகளுக்கு எதிராக தனது ராணுவ ஆயுத பலத்தை காட்ட அடிக்கடி ஏவுகணை சோதனைகள் மேற்கொள்வதை வாடிக்கையாக வடகொரியா கொண்டுள்ளது. குறிப்பாக தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவே இந்த சோதனையை வடகொரியா மேற்கொள்கிறது. அணு ஆயுதங்களை சோதிக்க கூடாது என்று உலக அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பாந்தத்தில் கையெழுத்திடாத நிலையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வடகொரியா சோதித்து வருகிறது.

  வட கொரியா அதன் தடை செய்யப்பட்ட ஆயுதத் திட்டங்களை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாள்களுக்குள் வட கொரியா இரண்டு குறுகிய தூரம் பாய்ந்து இலக்குகளை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை நான்கு முறைக்கு மேல் ஏவி சோதனை நடத்தியது.

  தொடர்ந்து நேற்றும் மீண்டும் ஒரு முறை பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. எப்போதும் தென்கொரியாவை அச்சுறுத்திவந்த இந்த சோதனை தற்போது ஜப்பானையும் அச்சுறுத்தியுள்ளது. நேற்று ஏவிய ஏவுகணைகள் ஜப்பான் நாட்டின் மீது பறந்து அந்நாட்டை தாண்டி பசிபிக் கடலில் விழுந்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த ஜப்பான் தன்னாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இந்த சீண்டலுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: உக்ரைன் போரை தீர்த்துவைக்க எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. ஆத்திரத்தில் உக்ரைன் மக்கள்!

  வடகொரியாவின் ஏவுகனை ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக 2017ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் தற்போது தான் பறக்கிறது. உக்ரைன் போரில் அதிரடி திருப்பங்களால் ஐரோப்பிய பிராந்தியம் பதற்றத்தை கண்டுள்ள நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியமும் வடகொரியாவின் செயல்களால் பதற்ற நிலையில் உள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Japan, North and south korea, North korea