Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாட்டி வதைக்கும் குளிர்... சட்டப்பேரவைக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த எம்.எல்.ஏக்கள்!

வாட்டி வதைக்கும் குளிர்... சட்டப்பேரவைக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த எம்.எல்.ஏக்கள்!

வட இந்தியாவில் பனிமூட்டம்

வட இந்தியாவில் பனிமூட்டம்

கடும் குளிர் காரணமாக டெல்லியின் காற்று மாசுபாடும் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

வட மாநிலங்களில் மைனஸ் டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வெப்பநிலை பதிவானதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இமயமலையில் இருந்து நாட்டின் வடமேற்கு சமவெளிகளில் குளிர் அலை வீசக்கூடும் என்பதால் வடமாநிலங்களின் பல இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய இந்தியாவில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

கடும் குளிர் காரணமாக உத்தரபிரதேசத்தின் கோரக்பூர், மீரட் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலும் கடும் குளிர் மற்றும் மூடுபனி காரணமாக 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்தது. குறைந்தபட்சமாக ராஜஸ்தானின் சுருவில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸூம் சிகாரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸூம் அல்வாரில் 0 டிகிரி செல்சியஸூம் பதிவானது. ஹரியானாவின் ஹிசார் நகரில் 0.8 டிகிரி செல்சியஸூம், டெல்லியின் சஃப்தர்ஜங்கில் 1.4 டிகிரி செல்சியஸூம் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

கடும் குளிர் காரணமாக டெல்லியின் காற்று மாசுபாடும் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. காற்றின் தர குறியீடு 337யை தொட்டுள்ள நிலையில், மிகவும் மோசமான நிலையிலேயே தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் நிலவும் மோசமாக காற்று மாசை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து சிலிண்டருடன் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

டெல்லி சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டத்தில் காற்று மாசு தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. காற்று மாசை கட்டுக்குள் வைக்க ஆம் ஆத்மி அரசு தவறி விட்டதாக குற்றஞ்சாட்டி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: BJP MLA, Delhi, Snowfall, Winter