• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கண்ணீர் சிந்த வைத்த அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

கண்ணீர் சிந்த வைத்த அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

விபத்து நடந்த காட்சிகள்

விபத்து நடந்த காட்சிகள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி படுகாயமடைந்த பெண் யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை, சிலிகுரி - துப்ரி இடையே ஓடும் இண்டெர்சிட்டி ரயில் மோதி, யானை படுகாயமடைந்தது.

    காலை 8.10 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் பயங்கரமாக மோதியதில் 30 மீட்டர் தொலைவுக்கு யானை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்தில், யானை படுகாயமடைந்தது. ரயிலின் எஞ்சின் பகுதியும் பலத்த சேதமடைந்தது.



    உடம்பெல்லாம், சிராய்ப்பு காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட, தவழ்ந்து சென்று பின், ஒரு மரத்தின் அருகே எழுந்து நிற்கிறது அந்த யானை. இந்த காட்சியை ரயில் பயணிகள் தங்களது போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள், பார்க்கும் ஒவ்வொருவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது. கம்பீரமாக காட்டில் வலம் வரும் யானையா? இப்படி என்று பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    விபத்தில் படுகாயமடைந்த பெண் யானைக்கு வனத்துறை அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு சிகிச்சை அளித்து வந்தனர். உள்காயம் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், வலியால் அந்த யானை கதறித்துடித்தது.

    நேற்று இரவு அந்த யானை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது. யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் ரயில்களை இயக்குவது குறித்து ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.



    விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், 2015-16 ஆண்டில் அப்பகுதியில் 25 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு விபத்து குறைந்ததால், ரயில் வேகத்தை 50 கிமீ ஆக அதிகரிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டு, தற்போது வரை 50 கி.மீ வேகத்தில் ரயில்கள் அங்கு இயக்கப்படுகிறது.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: