கேரளாவில் இரு குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக தீவிர வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பு ஏற்படும் நிலையில் மாநிலம் முழுவதும் சுகாதாரமான உணவு, நீர் வழங்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் விழிஞ்சியம் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த இரு பள்ளி குழந்தைகளுக்கு இந்த நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளியில் மத்திய உணவு சாப்பிட்ட பின் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், 'பாதிப்புக்குள்ளான இரு குழந்தைகளுக்கும் நல்ல சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது. எனவே, யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அதேவேளை, அனைவரும் பாதுகாப்புடன், சுகாராதரத்துடன் இருக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும்' என்றுள்ளார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கேரளாவின் பூக்கூடே கால்நடை மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு அறிகுறிகள், தற்காப்பு வழிகள்
இந்த நோரோ வைரஸ் பாதிப்பு பொதுவாக குளிர் காலத்தில் தான் ஏற்படும். சுகாதாரம் அற்ற உணவு, நீர் பகுதிகளால் பரவும் இந்த வைரஸ் பாதிப்பு ஆண்டுதோறும் 6.8 கோடி பேருக்கு ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலை வலி, வயிறு வலி, உடல் வலி போன்றவை அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.தீவிரம் அதிகமானால் உடலில் நீர் சத்து இல்லாத சூழல் ஏற்படலாம்.
இதையும் படிங்க: IRCTC மூலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதற்கான வரம்பு அதிகரிப்பு: இந்திய ரயில்வே அறிவிப்பு
அனைத்து வயதினருக்கும் பரவும் இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க சுகாதாரம் மட்டுமே அடிப்படை வழியாகும். ஒவ்வொரு முறை உணவு தயாரிக்கும் போதும், உட்கொள்ளும் போதும் கைகளை தூய்மையாக கழுவிக்கொள்ள வேண்டும். அதேபோல், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெளி உணவுகளை ஒரு வாரத்திற்கு தவிர்க்க வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்கள் குறைந்தது இரு நாள்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.