Home /News /national /

அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

Nora Fatehi

Nora Fatehi

கடந்த 2020 டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு லீனா மரியா பால் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாக நடிகை நோரா தெரிவித்திருக்கிறார்.

    சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, அமலாக்கத்துறை தரப்பு சாட்சியமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற விஐபிக்களை ஏமாற்றி பண மோசடி செய்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஆனால் சிறையில் இருந்தவாரே அவர் நடத்திய பகீர் மோசடி தான் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியிருக்கிறது. சுகேஷ் கடந்த ஜூன் 2020 முதல் மே 2021 வரை திகார் சிறையில் இருந்தவாறே ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவர் சிவேந்திர சிங்கின் மனைவி அதிதியை தொடர்பு கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் கணவரை வெளியே கொண்டு வர உதவுவதாக அணுகியுள்ளார்.

    இதன் பின்னர் அவர் Mobile Phone Spoofing என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சட்டத்துறை செயலர், உள்துறை செயலர், மற்றும் மத்திய அமைச்சரின் பிரதிநிதி பேசுவது போல அதிதியை நம்ப வைத்து 215 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.

    இதையும் படிங்க:  12 குடும்ப ஓட்டுகள் இருந்தும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் - வாக்கு எண்ணும் மையத்தில் கதறி அழுதார்...

    மேலும், திகார் சிறை அதிகாரிகளுக்கு அவர் மாத மாதம் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறைக்குள்ளேயே ஒரு அலுவலகத்தையும் அமைத்து மோசடி தொழிலை அரங்கேற்றி வந்ததாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுகேஷுக்கு பாலிவுட் நடிகைகளிடமும் நெருக்கம் இருந்துள்ளது. குறிப்பாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் கடந்த மாதம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதே போல நடிகை நோரா ஃபதேஹிக்கும் சுகேஷுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்த நிலையில் நடிகையை நேரில் அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.

    இதையும் படிங்க:   காதலனுடன் மொபைலில் பேசி பெற்றோரிடம் சிக்கிய சிறுமி வீட்டில் இருந்து தப்பிக்க திரைப்பட பாணியில் செய்த சாகசம்!

    இந்நிலையில், தற்போது நோரா ஃபதேஹி அமலாக்கத்துறை தரப்பு சாட்சியாக மாறி விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவைச் சேர்ந்த மாடல் அழகியான நோரா ஃபதேஹி அமலாக்கத்துறையினரின் விசாரணையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் தனக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும், அவரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பால் தனக்கு விலையுயர்ந்த பேக் ஒன்றையும் பரிசளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

    மேலும். கடந்த 2020 டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு லீனா மரியா பால் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாக நடிகை நோரா தெரிவித்திருக்கிறார்.

    சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி