முகப்பு /செய்தி /இந்தியா / ராமநவமி அன்று அசைவ உணவு: ஜேஎன்யூ மாணவர்கள் இடையே மோதல்

ராமநவமி அன்று அசைவ உணவு: ஜேஎன்யூ மாணவர்கள் இடையே மோதல்

ஜெஎன்யூ மாணவர்கள் மோதல்

ஜெஎன்யூ மாணவர்கள் மோதல்

JNU violence: ராமநவமி ஆன்று டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பறிமாறப்பட்டுள்ளது. இதற்கு ஏவிபிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடதுசாரி அமைப்பு மாணவர்கள் பதில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருகட்டத்தில் மோதல் ஏற்பட்டு மாணவர்கள் தாக்கிக் கொண்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ராமநவமி அன்று அசைவம் உண்பது தொடர்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஏவிபிபி - இடதுசாரி  மாணவர்கள் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியது. இதில் பலர் காயமடைந்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இரு பிரிவு மாணவர்கள் இடையே நேற்று மோதல் வெடித்தது. நேற்று ராமநவமி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பல்கலைக்கழக உணவு விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு வலதுசாரி மாணவர் அமைப்பான ஏவிபிபி சங்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு இடதுசாரி அமைப்பு சங்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் பதில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.இதில் ஆறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவயிடத்துக்கு விரைந்த காவல்துறை நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த மாணவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவனிடம் விளையாடும் புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா... வைரல் வீடியோ

அசைவ உணவு உண்ட மாணவர்களை ஏவிபிபி அமைப்பு மாணவர்கள்தான் முதலில் தாக்கியதாக இடதுசாரி அமைப்பினர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் தொடர்பான வீடியோக்கள், காயமடைந்தவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. அதேவேளை, தங்கள் ராமநவமி வழிபாட்டை இடதுசாரி மாணவர்கள் இடையூறு செய்ததாகக் கூறி ஏவிபிபி மாணவர்கள் தரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கான தடயங்கள் சாட்சிகள் ஆகியவற்றை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும், சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப் படுவார்கள் என காவல்துறை உறுதியளித்துள்ளது.

மேலும் படிக்க: வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் இந்தி மொழியை கட்டாயமாக்குவது ஏன்? மாணவ அமைப்பினர் கேள்வி

மேலும், விடுதியின் வார்டன், செக்யூரிட்டி ஆகியோருக்கு ஜேஎன்யூ நிர்வாகம் சம்மன் அனுப்பி நிர்வாகம் தனிப்பட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து இடதுசாரி அமைப்பு மாணவர்கள் இன்று  டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

top videos

    நவராத்திரி பண்டிகையை ஒட்டி ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை தெற்கு டெல்லியில் கறி விற்பனை செய்யத் தடை விதித்து தெற்கு டெல்லி மாநகராட்சி மேயர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் அசைவம் உண்பது தொடர்பாக மாணவர்களிடையே பெரும் மோதல் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: JNU, Non Vegetarian, Students