உடல் உறவு வைக்காமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்புதான் - உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமை

பெண்ணுடன் உடல் உறவு கொள்ளவில்லை. எனவே அதை கற்பழிப்பாக கூற முடியாது என குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 • Share this:
  உடல் உறவு வைக்காமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ்தான் வரும் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  மும்பை சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவர் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கு விசாரணையின் முடிவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக அந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  இந்தத்தீர்ப்பை எதிர்த்து வாலிபர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வாலிபர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ பெண்ணுடன் உடல் உறவு கொள்ளவில்லை. எனவே அதை கற்பழிப்பாக கூற முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரேவதி மோகிதே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாலிபருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அந்த தீர்ப்பில், “மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்தான் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதற்காக ஆதாரங்களும் உள்ளது. உடல் உறவு வைக்காமல் விரலால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ் தான் வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: