திருப்பதியில் இந்து அல்லாத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டம்

திருப்பதி

திருப்பதி தேவஸ்தானத்தில் 48 ஊழியர்கள் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருப்பதி கோவில் தேவஸ்தானத்தில் இந்து அல்லாத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் மதம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. கடந்த வாரம் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர தலைமைச் செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம், தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இந்து அல்லாத ஊழியர்கள் கண்டிப்பாக பணியில் இருந்து விலக வேண்டும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் 48 ஊழியர்கள் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் ஆந்திரப் பிரதேச அரசுப் பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் புனிதப் பயணம் விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க...காவல் நிலையத்தில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள் கைது
Published by:Vaijayanthi S
First published: