ஹோம் /நியூஸ் /இந்தியா /

கருணாஸ் பட நாயகிக்கு வெளிவர முடியாத பிடிவாரண்ட்.. மும்பை நீதிமன்றம் அதிரடி!

கருணாஸ் பட நாயகிக்கு வெளிவர முடியாத பிடிவாரண்ட்.. மும்பை நீதிமன்றம் அதிரடி!

ரன்வீத்

ரன்வீத்

Navneet rana Case | பிடிவாரண்ட் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  போலி சாதி சான்றிதழ் வழக்கில் சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா, தமிழில் கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர்.

  இவர் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் போட்டியிட போலி சான்றிதழ் பெற்றதாக மும்பை முல்லுண்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  இந்த வழக்கு விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

  ALSO READ | நான் சொன்னது பொய்யா இருந்தா தூக்கிலிடுங்க - லெட்டரில் அதிர வைத்த சுகேஷ் சந்திரசேகர்! ஷாக்கில் ஆம் ஆத்மி!

  இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவ்நீத் ரானாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என போலீசார் கேட்டுள்ளனர். இதனை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு மோகாஷி, நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத புதிய பிடிவாரண்டை பிறப்பித்தார்.

  மேலும் பிடிவாரண்ட் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Mumbai Police