Home /News /national /

பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள்

பத்ம விருதுகள்

2023 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    நாட்டின் மிக உயரிய சிவில் விருதுகளாக பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகளை பெற வேண்டும் என்றால் கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்க வேண்டும். இதற்காக வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    எந்தவித பாகுபாடு இல்லாமல் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது. தற்போது நாமக்கல் மாவட்ட மக்கள் இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.

    Also Read : ஒரு கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பயன் பெற்ற மத்திய அரசின் UDAN திட்டம்

    பத்ம விருதுகளை மக்களின் பத்ம என்று மாற்றம் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே அனைத்து குடிமகக்களில் எவரும் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது மற்றவர்களை பரிந்துரை செய்யலாம். சமூகத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் பெண்கள், நலிந்தபிரிவினர், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களை பரிந்துரை செய்த அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநில / யூனியன் பிரதேச அரசுகள், பாரத ரத்னா, பத்மவிபூஷன், விருதுபெற்றவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பத்ம விருகள் 2023-க்கான இணையவழி விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் தேசிய விருதுகளுக்கான https://awards.gov.in என்ற இணைய பக்கத்தில் மட்டுமே ஏற்கப்படும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Padma Awards

    அடுத்த செய்தி