இருட்டில் அடையாளம் கண்டறியும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நொய்டா விஞ்ஞானி!

ஷிவானி வர்மா

இந்த தொழில்நுட்பம் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. சமீபத்தில் DRDO ஏற்பாடு செய்திருந்த தொழில்நுட்பம் சார்ந்த ஒரு போட்டியில் விஞ்ஞானியின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில் அவர் சமர்ப்பித்த தொழில்நுட்பமானது ஒருவர் இருட்டில் இருந்தாலும் அல்லது தனது முகத்தை மூடியிருந்தாலும், உடலியல் அளவுருக்களின் அடிப்படையில் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிய உதவும் AI தொழில்நுட்பம் தான் அது. இது குறித்து அவரது பல்கலைக்கழகம் கடந்த செவ்வாயன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  அதில், அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (AISST) யில் பணிபுரியும் டாக்டர் ஷிவானி வர்மா, டிஆர்டிஓ நடத்திய “டேர் டு ட்ரீம் 2.0” என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் விருதை வென்றுள்ளார். போட்டியில் அவர், “உடலியல் அளவுருக்கள் அடிப்படையில் ஒரு நபரை AI- அடிப்படையில் கண்டறிதல்” என்ற புதுமையான கருத்தை சமர்ப்பித்தார்.

  Also Read: QS World University Ranking 2022: உலகின் சிறந்த 400 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்த 8 இந்திய பல்கலை எவை?

  இதையடுத்து டி.ஆர்.டி.ஓ இணையதளத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, போட்டியின் தனிப்பட்ட பிரிவில் ஐந்து சிறந்த பரிசு வென்றவர்களில் டாக்டர் வர்மாவும் ஒருவர், இந்த தொழில்நுட்பம் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது கண்டுபிடிப்பு ஒரு நபரின் உடலியல் அளவுருக்களின் அடிப்படையில் அங்கீகாரத்தின் உயர் துல்லியத்துடன் உள்ளமைக்கப்பட்ட, ஒரு அறிவார்ந்த ஊடுருவல் அங்கீகார அமைப்பில் உருவாகிறது. பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லாத நிலையில் இது கட்டாயம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

  இது குறித்து அமிட்டி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாவது, "இது எலும்புத் தரவு, நடை, மறைந்த முக அடையாளம் மற்றும் இயக்கம் அளவுருக்கள் போன்ற அளவுருக்களின் இணைவைக் கருத்தில் கொண்டு கண்டுபிடிக்கும் புதுமையான தீர்வாகும். அங்கு நபர் இருண்ட இடத்தில் நகர்ந்தாலும் அவரது அடையாளத்தை இதன்மூலம் கண்டறிய முடியும்" என்று கூறியுள்ளது.

  மேலும் “ஒருவர் மாறுவேடத்தில் இருந்தாலும், அல்லது அடையாளம் காணக்கூடாது என முகத்தை மறைத்தாலும் அல்லது பிறரின் கைரேகைகளை கொண்டு சமூக விரோத செயலில் ஈடுபட்டாலும் இந்த தொழில்நுட்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது. ஒரு நபரை அடையாளம் காண புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறை போன்றவற்றிற்கு இது மிகவும் துல்லியமான அனுமான அணுகுமுறையாக இருக்கும் "என்று பல்கலைக்கழகம் மேலும் கூறியுள்ளது.

  டி.ஆர்.டி.ஓவால் செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டி.டி.எஃப்) இந்த திட்டத்தை நான்கு வாரங்களுக்குள் திட்ட முன்மொழிவின் விவரங்களை வழங்குமாறு கோரியுள்ளது. இந்த நிலையில் வர்மா தனது லிங்க்ட்இனில் இது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார். இந்த யோசனையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு பரிசீலிக்க வேண்டும் என்று ஏ.ஐ.எஸ்.எஸ்.டி இயக்குனர் டாக்டர் எம்.எஸ். பிரசாத்தின் வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் வர்மா கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: