புத்தாண்டு அன்று இரவு அஞ்சலி சிங் என்பவர் 10 கிலோமீட்டருக்கு காரில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட செய்தி ஏற்கனவே நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் பொது அதே போன்ற மற்றொரு நிகழ்வு நொய்டாவில் நடந்தது தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நொய்டாவில் ஒரு கார், இரு சக்கர வாகனத்தில் மோதி அதில் இருந்த நபரை சுமார் 500 மீட்டர் வரை இழுத்துச் சென்றதால் அந்த நபர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரிந்த கௌஷல், புத்தாண்டு இரவு டெலிவரிக்காக சென்றபோது, நொய்டா செக்டார் 14ல் உள்ள மேம்பாலம் அருகே கார் ஒன்று அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. மோதியதோடு காரோடு சேர்ந்து கௌஷலும் சுமார் 500 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். கௌஷலின் சடலத்தைக் கண்டவுடன் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகே காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் கௌஷலின் சகோதரர் அமித் அவருக்கு போன் செய்தபோது, அந்த வழியாக சென்ற ஒருவர் அழைப்பை எடுத்து விபத்து குறித்து அவருக்குத் தெரிவித்தார். பின்னர் அமித் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . இந்த சமயத்தின் குற்றவாளியைக் கண்டுபிடிக்க அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளை ஸ்கேன் செய்து வருகிறோம் என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் கார் மீது மோதி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.