Home /News /national /

பாட்டியின் காதலனால் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

பாட்டியின் காதலனால் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

Toxic Relationship

Toxic Relationship

என் மகன் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என பாட்டி நீரஜ் தெரிவித்திருக்கிறார்.

    3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து படுகொலை செய்த பாட்டியின் 55 வயது காதலன் போலீசார் பிடியில் சிக்கியுள்ளான்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத் நகர் மாவட்டத்தின் நொய்டா நகரின் பிஸ்ராக் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் சர்மா என்ற பெண்மணி. இவருடைய மகன் வழி பேத்தியான 3 வயது சிறுமியுடன் நீரஜ் சர்மா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ம் தேதியன்று வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த தனது பேத்தி மாயமானதாக ஃபேஸ் 2 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து குழந்தை கடத்தல் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வந்த போலீசார், டிசம்பர் 28ம் தேதியன்று நீரஜ் சர்மாவின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் இருந்து குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து கொலை, ஆதாரங்களை மறைத்தல், போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளையும் இந்த வழக்கில் சேர்த்தனர்.

    Also read:  முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்கக் கூடாது - இஸ்லாமிய அமைப்பு

    போலீசாரின் தீவிர விசாரணையின் போது குழந்தையின் வீட்டுக்கு புலந்தசாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் கான்பூர் என்பவர் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. சப்ஸி மண்டி செக்டரில் வசித்து வந்த அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

    கொல்லப்பட்ட குழந்தையினுடைய பாட்டிக்கும், ஹேமந்திற்கும் இடையே கள்ள உறவு இருந்துள்ளது. இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் குழந்தை இவர்களின் திருமணத்திற்கு தடையாக இருந்திருக்கிறது.

    Also read:  கொரோனாவால் 3 பேர் பாதிப்பு - 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு போட்ட சீனா!

    நீரஜின் மகனான குழந்தையின் தந்தை, வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி புதான் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இதனால் குழந்தையை பராமரிக்க ஆள் கிடையாது. என் மகன் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஹேமந்திடம் நீரஜ் தெரிவித்திருக்கிறார்.

    Also read:  சிறுமி இறந்த பின்பும் பலாத்காரம் செய்த கொடூரர்கள் - பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

    இந்த நிலையில் தான் ஹேமந்த், அக்குழந்தையை வீட்டில் இருந்து ஆள் அரவமற்ற அந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அக்குழந்தையை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் பாட்டி நீரஜை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கும் இந்த கொலை சம்பவத்தில் பங்கு இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Illegal relationship, Pocso, POCSO case, Toxic Relationship

    அடுத்த செய்தி