NOBODY WOULD BE DISCRIMINATED ON THE BASIS OF THEIR RELIGION PM MODI MUT
மத அடிப்படையிலான பாகுபாடு இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மத அடிப்படையிலான பாகுபாடு இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மத அடிப்படையிலான பாகுபாடு இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று கூறினார்.
பிரதமர் மோடி தன் உரையில் கூறியதாவது:
“பிஎம் கேர்ஸ் நிதிக்குப் பங்களிப்பு செய்தல், இலவசப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஒரு மினி இந்தியா போன்றது. அலிகர் பல்கலைக் கழகம் இந்தியப் பண்பாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது. அலிகர் பல்கலைக் கழகம் பலரது வாழ்வை செதுக்கி வடிவமைத்துள்ளது.
இங்கு ஒருபுறம் அரபு மொழி கற்பிக்கப்படுகிறது மறுபுறம் சமஸ்கிருத மொழியும் கற்பிக்கப்படுகிறது. இஸ்லாமிய உலகத்துடன் பண்பாட்டு ரீதியான உறவுகளைப் பலப்படுத்த அலிகர் உதவியுள்ளது.
இந்தியாவில் படிக்கும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டினர் இந்நாட்டின் சிறந்தவற்றை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
மத அடிப்படையிலான பாகுபாடு இல்லாத நிலையை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள வள ஆதாரங்கள் அனைத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரித்தானதே.
முஸ்லிம் பெண்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவது என்பது ஒரு கட்டத்தில் 70 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது ஸ்வச் பாரத் அபியான் மூலம் இந்த விகிதம் 30% ஆகக் குறைந்துள்ளது. அலிகர் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் ஒரு பெண்., அவர் பேகம் சுல்தான் ஜஹான் ஆவார். பெண்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள அவர்களுக்கு கல்வி அவசியம்.
பல்துறை நிபுணத்துவம் சார்ந்த கல்வி என்பதே புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையும் கூட. மக்கள் அதிகம் அறிந்திராத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். 75ம் சுதந்திர ஆண்டை முன்னிட்டு பழங்குடி மற்றும் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
அலிகர் பல்கலைக் கழக ஆவணங்களை மின்னணுமயமாக்க ஆய்வாளர்கள் முன் வர வேண்டும்.
கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் தேசிய இலக்குகளை, லட்சியங்களைக் கருத்தில் கொள்ளும் போது வேறுபாடுகள், வேற்றுமைகள் மறைந்து போகும். நான் அலிகரில் பேச விரும்பியதன் காரணம், இந்த மண்ணிலிருந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் எழுச்சி பெற்றுள்ளனர். இவர்கள் பலதரப்பட்ட சமூகப் பின்னணி, சிந்தனைப் பின்புலம் கொண்டவர்கள். ஆனால் சுதந்திரப் போராட்டம் என்றவுடன் வித்தியாசங்களை மறந்து ஒன்றிணைந்தனர்.
சமூகத்துக்கு அரசியல் அவசியம்தான், ஆனால் தேசக்கட்டுமானத்தில் அரசியலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் உள்ளன. தேசக்கட்டுமானத்தை அரசியல் என்ற முப்பட்டைக் கண்ணாடி ஊடே பார்த்தல் கூடாது. அரசியல் காத்திருக்கலாம், சமுதாயமும் காத்திருக்கலாம் ஆனால் வளர்ச்சி முன்னேற்றம் காத்திருக்க முடியாது.
நலிவுற்றவர்கள் வளர்ச்சிக்காக காத்திருக்க முடியாது. நாம் காலத்தை விரயம் செய்யாமல் தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதை நோக்கி பணியாற்றுவோம். இந்தியா தனது நூறாண்டு சுதந்திரத்தைக் கொண்டாட இன்னும் 27 ஆண்டுகள் உள்ளன, இந்த 27 ஆண்டுகள் அலிகர் பலகலைக் கழகத்துக்கு மிக முக்கியமானது. உங்களது ஒவ்வொரு அசைவும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை நோக்கி அமைய வேண்டும்.”