வேளாண் சட்டத்தை யாரும் கேட்காதபோது ஏன் இயற்றப்பட்டது? பிரதமர் மோடி விளக்கம்..

பிரதமர் நரேந்திர மோடி

 • Share this:
  குடியரசுத் தலைவரின் உரை மீது நன்றி தெரிவித்து பேசும் பிரதமர் மோடி தனது உரையில், “தற்போது ஒரு விவாதம் எழுந்துள்ளது. வேளாண் சட்டத்தை யாரும் கேட்காதபோது ஏன் இயற்றப்பட்டது எனக் கேட்கப்படுகிறது. வரதட்சணைக்கு எதிரான சட்டத்தைக்கூட யாரும் கேட்கவில்லை. ஆனால் இயற்றப்பட்டது. முத்தலாக் மற்றும் குழந்தைத் திருமணத்தின் மீதான சட்டங்கள் நாட்டு நலனுக்காக இயற்றப்பட்டவைதான்” என்று பேசியுள்ளார்.

  ”பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியமானவைதான். ஆனால் தனியார் துறைகளும் முக்கியமானவை. தொழில்நுட்பம், மருத்துவம் என எதை எடுத்துக்கொண்டாலும் நான் தனியார் துறையின் முக்கியத்துவத்தைப் பார்த்து வருகிறோம். இந்தியாவால் மனிதகுலத்துக்கு சேவை செய்ய முடிகிறதென்றால் அது தனியார் துறைகளின் ஆதரவால்தான்” என மேலும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


  ”காங்கிரஸ் கட்சி பிரிந்துள்ளது. குழப்பமடைந்துள்ளது. தன்னுடைய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்களால் பங்களிக்க முடியவில்லை. இதை விட துரதிர்ஷ்டவசமாக என்ன இருக்க முடியும்” என விமர்சித்துள்ளார். தொடர்ந்து குடியரசுத்தலைவரின் உரைமீது நன்றி தெரிவித்து பேசி வருகிறார்.
  Published by:Gunavathy
  First published: