ஹோம் /நியூஸ் /இந்தியா /

''மாநில அரசில் உள்ள யாரும் கவர்னர் மாளிகையை கட்டுப்படுத்த முடியாது'' : கேரள ஆளுனர்

''மாநில அரசில் உள்ள யாரும் கவர்னர் மாளிகையை கட்டுப்படுத்த முடியாது'' : கேரள ஆளுனர்

கேரள சட்டமன்றத்தில் நடந்த கவர்னர் உரையின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 'கவர்னர் கோ பேக்' என முழக்கங்களை எழுப்பி, பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மாநில அரசில் உள்ளா யாரும் கவர்னர் மாளிகை மீது அதிகாரம் செலுத்த முடியாது என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். கேரள அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

  கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

  மத்திய அமைச்சர்கள் அதிகபட்சமாக 11 பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் கேரள மாநில அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அந்த வகையில் மக்களின் வரிப்பணம் பெருமளவு வீணடிக்கப்படுகிறது.

  அமைச்சர்களுக்கான உதவியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் பணிக்கு பின்னர் தங்களுக்கு வாய்ப்பளித்த கட்சிக்காக பணியாற்றுகின்றனர். இந்த திட்டத்தை நான் நீக்க விரும்புகிறேன்.

  இதையும் படிங்க - தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் படைப்புகளை வாசியுங்கள் - பிரதமர் நரேந்திரமோடி

  அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதுதான் என்னுடைய வேலை. மாநில அரசை சேர்ந்த எந்த ஒருவரும், கவர்னர் மாளிகையை கட்டுப்படுத்த முடியாது. அப்படி செய்ய முயற்சித்தால் அது அரசியலமைப்பு சட்ட பிரச்னையாக மாறிவிடும்.

  அரசு நிர்வாகத்தை நான் நடத்துவதற்காக நான் இங்கு இல்லை. அரசியலமைப்பு சட்டத்தை மீறாத வகையில் ஆட்சி கேரளாவில் நடைபெறுகிறதா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இதையும் படிங்க - பெண்ணின் வயிற்றிலிருந்து 47 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்!

  கேரள சட்டமன்றத்தில் நடந்த கவர்னர் உரையின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 'கவர்னர் கோ பேக்' என முழக்கங்களை எழுப்பி, பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

  கேரளாவில் கவர்னருக்கும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்னரின் பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kerala