வாக்காளர்களை தொடர்ந்து மிரட்டி வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்; அமைச்சரே பகிரங்கமாக மிரட்டியதால் பொதுமக்கள் அதிருப்தி!

வாக்காளர்களை தொடர்ந்து மிரட்டி வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்; அமைச்சரே பகிரங்கமாக மிரட்டியதால் பொதுமக்கள் அதிருப்தி!

வாக்காளர்களை மிரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்

முதல்வர் மமதா பானர்ஜி கொண்டு வந்த திட்டங்களால் கட்சி பாகுபாடின்றி பயனடைந்திருக்கின்றனர். யாராவது அவரை ஏமாற்றினால் துரோகிகளாக குறிவைக்கப்படுவீர்கள். துரோகிகளை தேர்தலுக்கு பின்னர் ‘தகுந்த முறையில் கவனிப்போம்’ என எம்.எல்.ஏ பேசினார்.

  • Share this:
எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் தண்ணீர், மின்சாரம் எதுவும் கிடைக்காது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வாக்காளர்களை மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்ததால் மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே முதல் கட்ட தேர்தல் வரும் மார்ச் 27ம் தேதி அங்கு தொடங்க இருப்பதால் பொதுக்கூட்டங்களில் அணல் பறக்க பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்காளர்களை மிரட்டும் வகையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பொதுமக்களிடம் பேசியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தின் விவசாயத்துறை அமைச்சராக இருந்து வருபவர் தபன் தாஸ் குப்தா, இவரை எதிர்வரும் தேர்தலில் Saptagram தொகுதியின் போட்டியாளராக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று ஹூக்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தபன் தாஸ் குப்தா பேசும்போது, “எனக்கு தேர்தலில் வாக்காளிக்காவிட்டால் உங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைக்காது. அவ்வளவு தான். வேண்டுமென்றால் பாஜகவிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள் ” என பேசினார். வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மிரட்டி பேசியதை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே வன்முறையில் ஈடுபட்டுவருவதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஒருவரே பொதுமக்களை மிரட்டியுள்ளது பெரும் அதிருப்தியை அக்கட்சி மீது ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் மிரட்டல் பேச்சு குறித்து பாஜகவைச் சேர்ந்த அமித் மால்வியா கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் நெருப்புடன் விளையாடுவதாக குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பொதுமக்களை மிரட்டியுள்ளது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த மார்ச் 4ம் தேதி தினஜ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஹமிதுல் ரஹ்மான் என்பவர், சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் தேர்தலுக்கு பின்னர் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார்.

முதல்வர் மமதா பானர்ஜி கொண்டு வந்த திட்டங்களால் கட்சி பாகுபாடின்றி பயனடைந்திருக்கின்றனர். யாராவது அவரை ஏமாற்றினால் துரோகிகளாக குறிவைக்கப்படுவீர்கள். துரோகிகளை தேர்தலுக்கு பின்னர் ‘தகுந்த முறையில் கவனிப்போம்’ என பேசினார்.
Published by:Arun
First published: