• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல் முடிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய வெற்றி கொண்டாட்டங்கள்/ ஊர்வலகங்கள் ஆகியவை நடைபெறாமல் இருப்பதை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும்.  இதேபோல், தேர்தலுக்கு பிந்தைய  வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

  • Share this:
    மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு முன்போ அல்லது பின்போ வெற்றிக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெறக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. வாக்குப் பதிவுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தின் பவானிபூர்,  சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர்  மற்றும் ஒடிசாவின்  பிப்பிலி ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவாக வாக்குகள் இன்று காலை 8 மணி முதல்  எண்ணப்பட்டு வருகின்றன. 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ள போதிலும் பவானிப்பூர் தொகுதி முடிவு இந்திய அளவில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

    பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டுள்ள  மம்தா பானர்ஜி வெற்றி பெற்றால் மட்டுமே முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதே இதற்கு காரணம். இதனிடையே பாவனிப்பூர் தொகுதி இடைத்தேர்தலின் 12வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி 35 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மம்தா 48,813 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரேவால் 13,843 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

    இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஏராளமானோர் மம்தா பானர்ஜியின் வீடு முன்பு குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை தடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இதையும் படிங்க: பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா முன்னிலை: கொண்டாட்டங்களை தொடங்கிய தொண்டர்கள்!


    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், இடைத்தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில், இடைத்தேர்தல் முடிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய வெற்றி கொண்டாட்டங்கள்/ ஊர்வலகங்கள் ஆகியவை நடைபெறாமல் இருப்பதை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும்.  இதேபோல், தேர்தலுக்கு பிந்தைய  வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் படிங்க: அரசு மீட்டிங்கில் முதல்வரின் மகன்.. பஞ்சாபில் அடுத்த சர்ச்சை!


    இடைத்தேர்தல் முடிவு காரணமாக மேற்கு வங்கத்தில் வன்முறை  சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறி பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: