Home /News /national /

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்றால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்றால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்

ரசு ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். இதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழ்களை சமர்பிக்காத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. தற்போது வரை 130 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கோவின் தளத்தில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நாட்டில் 210க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் பரவலையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன. அந்தவகையில்,கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழ்களை சமர்பிக்காத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்.

    இதற்கான சான்றிதழை பஞ்சாப் அரசு வேலைக்கான இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்தால் தான் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் நிலை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இதையும் படிங்க: லட்சத்தீவு மக்களை கொதிப்படைய செய்த புதிய அறிவிப்பு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19 vaccine, Punjab

    அடுத்த செய்தி