முகப்பு /செய்தி /இந்தியா / நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை - மத்திய கல்வி அமைச்சகம்

நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை - மத்திய கல்வி அமைச்சகம்

கோப்பு படம்

கோப்பு படம்

இந்த ஆண்டு நடைபெறும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் இருக்காது என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • Last Updated :

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் காணொளி காட்சி வழியாக உரையாடினார். அப்போது, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சி.பி.எஸ்.இ மாணவர்களின் திருத்தப்பட்ட பாடத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வில் வினாக்களுக்கு தெரிவுகள் வழங்கப்படாத நிலையில், தற்போது தெரிவுகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலிருந்து 75 மதிப்பெண்களுக்கு பதில் தலா 30 கேள்விகள் என 90 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் இடம்பெறும் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. கடந்த தேர்வில் மாணவர்கள் தாங்களாகவே கேள்விகளுக்கு விடைகளை எழுதும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஜே.இ.இ தேர்வுக்கான வினாத்தாள் முறையிலேயே நீட் தேர்வு வினாத்தாளும் இடம்பெறும் என்றும் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக பாடத்திட்டத்தை குறைதுள்ள நிலையில் அது குறித்தும் மத்திய கல்வி அமைச்சகம் கருத்தில் கொண்டு வினாத்தாள் வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

top videos
    First published:

    Tags: Jee, Neet Exam