விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தில் இருந்த 13 வீரர்களும் உயிரிழந்ததாக அறிவிப்பு!

அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான பகுதி என்பதால், விபத்து நடந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டர்களால் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தது.

news18
Updated: June 13, 2019, 2:21 PM IST
விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தில் இருந்த 13 வீரர்களும் உயிரிழந்ததாக அறிவிப்பு!
விமானம் விபத்துக்குள்ளான பகுதி
news18
Updated: June 13, 2019, 2:21 PM IST
அருணாச்சலப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தில் இருந்த 13 வீரர்களும் உயிரிழந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சலபிரதேச மாநிலத்தின் மெச்சுகா பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் கடந்த 3-ம் தேதி புறப்பட்டது. விமானத்தில் 13 பேர் இருந்த நிலையில், புறப்பட்ட 35 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கடந்த 8 நாட்களாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், காணாமல்போன விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில், லிப்போ பகுதியிலிருந்து வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் இது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஏஎன் 32 ரக விமானம் விபத்தில் சிக்கியது உறுதியானது.

பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் அருகே இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை சென்று சேர்ந்தன. ஆனால், அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான பகுதி என்பதால், விபத்து நடந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டர்களால் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தது.

விமானத்தின் பாகங்கள் கிடந்த இடத்தை இன்று மீட்புக்குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 13 பேரையும் கண்டறியமுடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக விமானப்படை இன்று அறிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த வீரர்களின் பெயர்களையும் விமானப்படை அறிவித்துள்ளது.





First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...