உ.பியில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை; யோகி ஆதித்யநாத் உறுதி

யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் எந்தவொரு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லவே இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  உத்தர பிரதேசத்தில் எந்தவொரு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லவே இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக நேற்று பல்வேறு செய்தி நிறுவன ஆசிரியர்களுடன் காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லை. தற்போது பிரச்சினை என்னவென்றால், பதுக்கல் மற்றும் கல்ல சந்தைப்படுத்துதலே. அதனையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார்.

  மேலும், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. அதனால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறமுடியாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் தேவையில்லை. இந்த விஷயத்தில் ஊடகத்தினரின் ஒத்துழைப்பு முழுமையாக தேவையானதாகும்.

  ஆரம்பத்தில் மருத்துவமனை படுக்கைகளை அதிகரிப்பதில் சில பிரச்சினைகள் இருந்தன. எனினும், அந்த பிரச்சினையும் உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டது என்று கூறினார்.

  மேலும், கொரோனா வைரஸை சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று நினைப்பது பெரும் தவறாகும். நானும் அதன்பிடியிலே உள்ளேன். கடந்த ஏப்.13ம் தேதி முதல் அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  அதேபோல், கடந்த முறை ஏற்பட்டதைவிட கொரோனா இரண்டாம் அலை பரவலில், 30 மடங்கு அதிகளவில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. எனினும், முன்பை விட மாநில அரசுகளின் ஏற்பாடுகள் நன்றாகவே உள்ளன என்றார். தொடர்ந்து, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற அறிவிக்கப்பட்ட முதல் மாநிலம் உத்தர பிரதேசம் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

  உத்தர பிரதேசத்தில் மே.1ம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த 8000 கொரோனா தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: