Home /News /national /

சீட் பெல்ட் அணியவில்லை.. அதிவேக பயணம்.. சைரஸ் மிஸ்திரி மரணம் தொடர்பாக முதற்கட்ட தகவல்

சீட் பெல்ட் அணியவில்லை.. அதிவேக பயணம்.. சைரஸ் மிஸ்திரி மரணம் தொடர்பாக முதற்கட்ட தகவல்

சைரஸ் விபத்து

சைரஸ் விபத்து

சரோட்டி சோதனைச் சாவடியை தாண்டி செல்லும் போது சொகுசு கார் சுமார் 9 நிமிடத்தில் 20 கிலோமீட்டர் தூரத்தை கடந்ததாக விசாரணையில் தெரியவந்தது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
ஞாயிற்றுக்கிழமை கார் விபத்தில் உயிரிழந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மற்றும் சக பயணி  ஆகிய இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  அதிவேகமும், ஓட்டுநரின் தவறும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

நேற்று அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பிற்பகல் 2:30 மணியளவில் சூர்யா ஆற்றின் பாலத்தில் இருந்த சாலை சுவற்றின் மீது கார் மோதியதில் மிஸ்திரி (54) மற்றும் ஜஹாங்கீர் பண்டோல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை மும்பையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அனாஹிதா பண்டோல் (55) ஓட்டினார். இந்த விபத்தில் அவரும் அவரது கணவரும் பலத்த காயம் அடைந்தனர்.

மிஸ்திரி மற்றும் ஜஹாங்கீர் பண்டோல் பின் இருக்கையில் அமர்ந்துள்ளனர். ஓட்டுநர் இருக்கையில் அனாஹிதா, முன் இருக்கையில் டேரியஸ் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டாடா குழுமத்தின் டாடா குடும்பம் அல்லாத முதல் தலைவர்-சைரஸ் மிஸ்திரி

ஒரு பெண் காரை ஓட்டிச் சென்றதாகவும், இடதுபுறத்தில் இருந்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகவும், ஆனால் கட்டுப்பாட்டை இழந்து சாலை டிவைடர் மீது மோதியதாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

மும்பையில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் உள்ள சரோட்டி சோதனைச் சாவடியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, விபத்து நடந்த இடத்திற்கு 20 கிமீ முன்னால் உள்ள ​​பால்கர் போலீஸார் கார் சோதனைச் சாவடியை மதியம் 2.21 மணியளவில் கடந்து சென்றுள்ளது.

சூர்யா ஆற்றின் பாலத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது என்று அதிகாரி கூறினார். இதன் மூலம் அவர் சென்ற மெர்சிடிஸ் கார் 20 கிமீ தூரத்தை 9 நிமிடங்களில் கடந்தது தெரிகிறது.

நம்மவர் முதல் ராட்சசி வரை.. தமிழ் திரையுலகத்தின் சிறந்த ஆசிரியர்கள்

முதற்கட்ட விசாரணையின்படி, அதிவேகமும், ஓட்டுனரின் பிழையும் தான் கார் விபத்துக்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு இறந்த இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரிந்தது. மேலும் 10 நிமிடங்களில் , காயமடைந்த இருவரை காரில் இருந்து வெளியேற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

சைரஸ் மிஸ்திரி உட்பட இரண்டு பேர் இறந்து கிடந்துள்ளனர். சைரஸ் தலையில் காயம் ஏற்பட்டு உள் இரத்தப்போக்கு இருந்தது. போலீஸ் விசாரணைக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று காசா மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் ஷுபஹாம் சிங் கூறினார்.

மிஸ்திரி மற்றும் ஜஹாங்கீர் பண்டோலின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மும்பையில் உள்ள அரசு நடத்தும் ஜேஜே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த விபத்தில் அனாஹிதா பண்டோல் மற்றும் அவரது கணவர் டேரியஸ் பண்டோல் (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவர்கள் குஜராத்தில் உள்ள வாபியிலிருந்து சாலை வழியாக மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Accident, Car accident

அடுத்த செய்தி