விமான பயணிகளுக்கு குட் நியூஸ்... இனி இது தேவையில்லை

விமானம்

மும்பை வந்த 48 மணி நேரத்திற்குள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையை சமர்பிக்காத பயணிகள் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

  • Share this:
இந்தியாவில் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட உள்நாட்டு பயணிகள் மும்பை விமான நிலையத்திற்குள் நுழையும் போது நெகட்டிவ் ஆர்டிபிசிஆர் அறிக்கைகளை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என மும்பை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மும்பைக்கு உள்நாட்டு விமானங்களில் வரும் அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறும் நேரத்தில் நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

மும்பை வந்த 48 மணி நேரத்திற்குள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையை சமர்பிக்காத பயணிகள் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. மக்கள் அதிகம் வசிக்கும் மும்பை மாநகரம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் நிலைமைகள் சற்று கட்டுக்குள் வர ஆரம்பித்தவுடன் பாதிக்கப்பட்ட நகரத்தின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) பயணிகளின் போக்குவரத்து சேவை அதிகரிக்க தொடங்கியது.

Also Read : ஆங்கிலேயர் காலத்து தேசத்துரோகச் சட்டம் தேவையா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதும் கடந்த மாதத்தில் பயணிகள் அளவு 60 சதவீத வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்ற விமான நிலையத்தில், முந்தைய மாதம் 6,94,890 பயணிகளைக் ஏற்றி சென்றது. இந்த ஆண்டு மே மாதத்தில் விமானத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 4,34,680-ஆக இருந்ததென தனியார் விமான நிலைய ஆபரேட்டர் கூறினார்.

இதற்கிடையில், 2021ம் ஆண்டின் முதல் பாதியில் அதாவது ஜனவரி முதல் ஜூன் மாதத்தில், CSMIA விமான நிலையம் மொத்தம் 72,61,158 பயணிகளைக் கையாண்டது. இதுதவிர உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு 77,797-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கியது. HICY21 இல் மொத்த பயணிகள் எண்ணிக்கையில், சுமார் 64,87,066 பேர் உள்நாட்டு பயணிகள் ஆவர் மற்றும் மீதமுள்ள 7,74,092 பேர் சர்வதேச பயணிகள் ஆவர். இப்போதைய நெருக்கடி காலகட்டத்தில், CSMIA நிலையம் உள்ளூர் வழித்தடங்களில் 63,992 விமானங்களையும், வெளிநாட்டு வழித்தடங்களில் 13,895 விமானங்களையும் செலுத்தியது.

Also Read : கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்ற கணவர் குடும்பத்தினர்!

கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விமான பயணங்கள் தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, துபாய் விமான நிலையம் மிகவும் பிரபலமான சர்வதேச இடமாக உருவெடுத்தது. அதாவது, 2,13,770 பயணிகள் இதுவரை இந்த காலகட்டத்தில் CSMIA ஏர்போட்டில் இருந்து துபாய்க்கு சென்றதாகவும் திரும்பி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து CSMIA விமான நிலையத்தில் இருந்து நெவார்க் (அமெரிக்கா) பகுதிக்கு 88,010 க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர்.

இதையடுத்து, ஹீத்ரோ முறையே 75,470 பயணிகளின் எண்ணிக்கையுடன் உள்ளது. இதேபோல், உள்நாட்டு பயணத்தை பொறுத்தவரை, மும்பை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 9,46,890 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் கோவாவிற்கு 5,42,350 மற்றும் பெங்களூருக்கு முறையே 4,32,180 பயணிகள் சென்றுள்ளதாக CSMIA தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், விமான போக்குவரத்துக்காக தர்பங்கா, அடம்பூர், மற்றும் கலபுராகி போன்ற புதிய வழித்தடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் படாம், ஆர்மீனியா, மியாமி, மற்றும் ஹூஸ்டன் போன்ற சர்வதேச வழித்தடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பயணிகளின் போக்குவரத்து சீராக அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய ஆபரேட்டரின் கூற்றுப்படி, பெரும்பாலான மாநிலங்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் செல்ல நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் மும்பை விமான நிலையம், முழுமையான தடுப்பூசி டோஸ் பெற்ற எந்த ஒரு பயணியும் சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: