Home /News /national /

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லை - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டம்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லை - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

வன்முறை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தேர்வுக்கு தயார் ஆகும் நபர்கள் அல்ல, தேர்வுக்கு தயாராகும் நபர்கள் வீட்டில் முறையாக படித்து வருகிறார்கள் என அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

    இந்திய பாதுகாப்புப் படையில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.இந்த திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயதினர் பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

    4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களில், 25 சதவீதத்தினர் மட்டுமே ராணுவப் பணியில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்களுக்கு ரூ.11-13 லட்சம் தொகையுடன் பணி ஓய்வு வழங்கப்படும். பெரும்பாலான இளைஞர்கள் நான்கு ஆண்டு மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், ராணுவ பணியில் இத்தகைய மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அக்னிபத் திட்டம் மற்றும் இது தொடர்பான போராட்டங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அஜித் தோவல் அளித்த பேட்டியில், 'உலகின் மிக இளமை வாய்ந்த மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அப்படி இருக்க இந்திய ராணுவத்தின் சராசரி வயது அதிகமாக இருப்பது முறையல்ல.

    இந்த வன்முறை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தேர்வுக்கு தயார் ஆகும் நபர்கள் அல்ல. தேர்வுக்கு தயாராகும் நபர்கள் வீட்டில் முறையாக படித்து வருகிறார்கள். போராட்டத்தின் பின்னணியில் தேர்வு பயிற்சி மையங்கள் இருந்தால், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.திட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆழமான விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பின் தான் அக்னிபத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டம் பல குழுக்களின் ஆலோசனை பேரில் தான் செயல்படுத்தப்படுகிறது. தனது அரசியல் பாதங்களையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்காக இது போன்ற முடிவை பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர்களால் தான் செய்ய முடியும்.

    இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்கும் யஷ்வந்த் சின்ஹா

    காலத்திற்கு ஏற்ப போர் முறை மாறிவருகிறது. தொழில்நுட்பத்தின் காலம் இது. நாளைய தேவைக்கு தாயர் ஆகும் போது, கடந்த காலத்தில் செயல்பட்டது போல தற்போதும் செயல்பட முடியாது. அக்னிபத் திட்டத்தில் பணியாற்றி விட்டு அக்னி வீரர்கள் 25-26 வயதில் வெளியேறினால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆவது என சிலருக்கு அச்சம் தெரிவிக்கிறார்கள். ஆனால், ஒருவர் மூன்று நான்கு விதமான வேலைகளை செய்யும் காலம் இது. இந்தியா விரைவில் 5 லட்சம் டாலர் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும். அப்போது இவர்களுக்கு அனைத்து துறைகளிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்' என்றுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Agnipath

    அடுத்த செய்தி